"துரோகம்".. மோடி வரைக்கும் போன பஞ்சாயத்து.. என்ன நடந்தது டெல்லியில்?.. டபுள் அப்செட்டில் சீனியர்..!
ஓபிஎஸ் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற ஆர்வத்தில் உள்ளார்
சென்னை: பிரதமர் மோடியை மலைபோல நம்பிக் கொண்டிருந்தாராம் ஓபிஎஸ்.. ஆனால், மோடி தரப்பு, அன்று சொன்னது வேறு, இப்போது நடந்து கொள்வது வேறு என்ற ரீதியில் அப்செட்டில் உள்ளாராம்.. என்ன நடந்தது?!
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, யாரையுமே பகைத்து கொள்ள மாட்டார்.. அவங்களும் வேணும், இவங்களும் வேணும் என்ற ரீதியிலேயே செயல்படுபவர்.. ஒருகட்டத்தில், பாஜக மீது தமிழ்நாட்டுக்கே மொத்த கோபம்வந்தாலும், ஓபிஎஸ் மட்டும் பாஜகவை பகைத்து கொண்டதே இல்லை..!
இவராவது பரவாயில்லை.. இவரது மகன் ஓபி ரவீந்திரநாத் லோக்சபாவில் பேசினால், அவர் பாஜகவா? அதிமுகவா? என்ற குழப்பம் வந்துவிடும் அளவுக்கு பாஜகவின் விசுவாசியாகவே மாறி போவார்.

பதவி
இதற்கெல்லாம் காரணம், மத்திய அமைச்சர் பதவிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஓபி ரவீந்திரநாத்துக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே டெல்லியில் முகாமிட்டவர் ஓபிஎஸ்.. மோடி என்றால் ஓபிஎஸ்ஸுக்கு அலாதி அன்பும்கூட.. இதனால், மத்திய மோடி அரசின் குட் புக்கில் எப்போதுமே இருந்தார் ஓபிஎஸ்.

நட்பு
இப்படிப்பட்ட பரஸ்பர அன்பிலும், நட்பிலும்தான் டமார் என ஒரு விரிசல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.. அதுவும் மோடி மீதுதான் ஓபிஎஸ்ஸுக்கு வருத்தமாம்.. அப்படி என்ன நடந்தது இவர்களுக்குள்? என்பதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்..!

நியாயங்கள்
விஷயம் இதுதான்... தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தன்னைத்தான் நியமிக்க வேண்டும் என்று ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் ஆளுக்கு ஒருபக்கம் மல்லுக்கட்டினார்கள் இல்லையா? அந்த பதவியைக் கைப்பற்ற தங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களையும் எடுத்து வைத்திருந்தார்கள்..

எடப்பாடி பழனிசாமி
அதாவது, "கொங்கு மண்டலத்தில் 80 சதவீத வெற்றியை நாங்கள் பெற்றுத் தந்திருக்கிறோம். கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுகவை வெற்றிப்பெற வைத்தோம். அதேபோல, தென்மாவட்டங்களில் நீங்களும் அதிமுகவை வெற்றிபெற வைத்திருந்தால் ஆட்சியை நாம் இழந்திருக்க மாட்டோம். அதனால் கட்சிக்கு கௌரவமான வெற்றியை தேடி தந்திருப்பதால் எனக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி" என்று எடப்பாடி பழனிசாமி தன்தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தார்.

எதிர்க்கட்சி தலைவர்
அதேபோல ஓபிஎஸ், "இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான்தான்... இருப்பினும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் வந்தபோது உங்களையே ஆதரித்தேன்... காரணம், கட்சி வெற்றிப் பெற்றால் நீங்கள் (எடப்பாடி) முதல்வர், கட்சி தோற்றுப்போனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி எனக்கு என்று தானே அன்றைக்கு பேசி முடிவெடுத்தோம்? இன்னைக்கு இப்படி மாற்றிப் பேசினால் எப்படி? அதனால் எனக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி" என்று ஓபிஎஸ் தன் தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தார். இதனால், முடிவு செய்யப்படாமல் இழுபறி நீடித்தது.

பதவி
அந்த சூழலில்தான், மோடி வரைக்கும் இந்த பஞ்சாயத்து சென்றுள்ளது.. அதற்கு மோடி தரப்பில், "எடப்பாடியின் காய்நகர்த்தலில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பழனிச்சாமிக்கு விட்டுக்கொடுத்திடுங்க... டெல்லியில் உங்கள் ஆசை நிறைவேறும்" என்று சொல்லப்பட்டதாம்.. இதை சொன்னதுமே ஓபிஎஸ் அமைதியானாராம்.. இறுதியில் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் எடப்பாடிக்கு கிடைத்தது.

ராஜாங்க அமைச்சர்
உங்கள் ஆசை நிறைவேறும் என்று மோடி தரப்பில் சொல்லப்பட்டதே, அது என்னவென்றால், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தனது மகனுக்கு தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர் பதவி வேண்டும் என்று ஓபிஎஸ் எதிர்பார்ப்பதுதானாம்.. அந்த ஆசை நிறைவேறும் என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பதவியை விட்டுக் கொடுத்தார் ஓபிஎஸ்!

அமைச்சரவை
இப்போது விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், தன்னுடைய மகனுக்கான அமைச்சரவை வாய்ப்புக் குறித்து டெல்லியில் விசாரித்துள்ளாராம் ஓபிஎஸ்.. அதற்கு, "நோ" என்று பதில் வந்துள்ளது.. இதை கேட்டு பயங்கரமான அப்செட்டில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.. எனக்கு டெல்லி இப்படி துரோகம் செய்துவிட்டதே என்று தன்னை சந்திப்பவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

ஊழல் புகார்கள்
ஆனால், மோடி தரப்பு ஏன், ஓபிஎஸ்ஸுக்கு அன்று நம்பிக்கை தந்துவிட்டு, இப்போது மறுப்பு சொல்ல வேண்டும்? இதற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது.. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை தூசி தட்டி எடுக்க உள்ளார்.. அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது ஓபிஎஸ் தானாம்.. ஒருவேளை, இந்த புகார் நிரூபணமானால், கோர்ட், கேஸ் என்று இவர்கள் செல்ல வேண்டி வரும்.. அப்படி இருக்கும்போது, ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லி கொண்டு வரும் பாஜக, ஓபிஎஸ் மகனுக்கு சீட் தருவதை விரும்பவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது..!
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications