கோட்டையிலிருந்து கோட்டை விட்ட திமுக.. தடுமாறியது இங்கே தான்.. தவெகவுக்கு பாசிட்டிவ்வா போன விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஆளும் திமுக அரசுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.. குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு இந்த விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், கரூர் விவகாரத்தில் திமுக கோட்டை விட்டது எங்கே என்று மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Behindwoods 02 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "கரூர் விஷயத்தில், ஒரு நபர் ஆணையத்தை உடனடியாக முதலமைச்சர் நியமித்துவிட்டார்.. ஆனாலும், இன்னும் ஒரே ஒரு காரியத்தை முதலமைச்சர் செய்திருக்கலாம்.

DMK CBI inquiry Karur

சிறப்பு விசாரணை குழு .

அதாவது எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரிய மனுவை, மாநில அரசு தரப்பில் எதிர்த்திருக்க வேண்டும். அதேபோல, இந்த துயர சம்பவத்தை பாஜக பயன்படுத்தி கொள்வார்கள் என்று தமிழக அரசுக்கு தெரியும்.. சிபிஐ விசாரணையை இதில் விஜய் தரப்பில் கோருவார்கள் என்றும் ஏற்கனவே தெரியும்..

அப்படியிருக்கும்போது உடனடியாக உயர் சிபிசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.. காரணம் சிபிஐ ஒரு மாநிலத்தில் உள்ளே வரும்போது, அங்கே லெவல் சிபிசிஐடி ஒரு கேடயமாக இருக்கும்.. கரூர் சம்பவத்தன்றே இந்த உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருந்தால், இன்று சிபிஐயை எளிதாக தடுத்திருக்கலாம்.. எல்லாவற்றையுமே நன்றாக செய்த முதலமைச்சர், இந்த விஷயத்தையும் செய்திருக்கலாம்.

அரசு அதிகாரிகள்

வெளிப்படையாக சொல்லப்போனால் கரூர் விவகாரம் ஒரு அரசியல் பிரச்சனையே தவிர, சட்டப்பிரச்சனை கிடையாது. இதில் எல்லா அரசியல் கட்சிகளுமே குளிர்காய்வார்கள்.. அதிலும் தேர்தல் நெருங்கும்போது இந்த விஷயத்தை பெரிதாக்குவார்கள்..

வருவாய்த்துறை செயலாளர் அமுதா தலைமையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பினையும் திமுக அரசு தவிர்த்திருக்கலாம்.. அந்த செய்தியாளர் சந்திப்பானது, மாநில அரசுக்கு எதிராக போகும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. இதெல்லாம் சேர்ந்துதான் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது..

இத்தனை விஷயங்களையும் கோட்டைவிட்டு, சிபிஐயையும், உச்சநீதிமன்றத்தையும் திமுக ஆதரவாளர்கள் வசைபாடுவது போன்றவையெல்லாம் அபத்தமானது.. தங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தால், பாஜக, ஆர்எஸ்எஸ் செய்வதைதான் திமுகவும் இப்போது செய்கிறது..

புத்தி கெட்ட மக்கள்

அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் தோற்றுள்ளது திமுக என்ற அனுபவம் மிக்க கட்சி.. இந்த சம்பவம் நடந்ததிலிருந்தே ஒருவித பதட்டம் திமுகவிடம் தெரிகிறது.. இந்த துயர சம்பவத்துக்கு நம்பர் 1 பொறுப்பு விஜய்தான்.. தன்னை பார்க்க வந்த கூட்டத்தை 7 மணி காக்க வைத்த முதல் குற்றவாளி விஜய்தான் என்பதில் சந்தேகமில்லை..

அடுத்த குற்றவாளி, புத்தி கெட்ட மக்கள்தான்.. எவ்வளவுதான் சட்டங்கள் இருந்தாலும், தனிமனிதன் திருந்தாவிட்டால் எதுவுமே செய்ய முடியாது.

மூன்றாவதாக, ஆயிரம் இருந்தாலும் அந்த இடத்தில் கூட்டம் நடத்த அரசு அனுமதி தந்திருக்க கூடாது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனுமதி தந்ததாக சொல்கிறார்கள்.. நீதிமன்றம் உத்தரவிட்டால் அப்பீலுக்கு போக வேண்டியதுதானே? அனுமதி தந்த கடமை தவறி அரசும் இதற்கு காரணம்.. ஏன் அனுமதி தந்தீர்கள் என்று இதைதான் சுப்ரீம் கோர்ட்டும் கேட்டுள்ளது..

கோட்டை விட்ட திமுக

90 சதவீத குற்றவாளி விஜய்யாக இருந்தாலும், திமுக அரசு பக்கம் நியாயமே இதில் இருந்தாலும்கூட, திமுகவும், திமுக அரசும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கோட்டை விட்டுவிட்டு நிற்கிறார்கள்.. 75 வருடமாக கட்சி நடத்துபவர்களுக்கு, கரூர் சம்பவம் அரசுக்கு எதிராக திரும்ப போகிறது என்று தெரியாதா?

இன்று விஜய் மீது தவறில்லை என்று சொல்பவர்கள்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. அந்தவகையில், திமுகதான் இப்போது பழியை சுமந்து கொண்டிருக்கிறது..

திமுக இதை செய்திருக்க வேண்டும்

சம்பவம் நடந்ததுமே மருத்துவக்குழு சென்றது, முதலமைச்சர் விரைந்தது, நிவாரணம் அறிவித்தது, ஒரு நபர் ஆணையம் அறிவித்தது அனைத்துமே சரியான விஷயங்கள்தான்.. ஆனால், எஸ்ஐடியை கோர்ட்டில் அனுமதித்திருக்க கூடாது, மேலும் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசே அன்றைய தினமே உத்தரவிட்டிருக்க வேண்டும். அதேபோல அரசு அதிகாரிகளை வைத்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியிருக்க கூடாது.

இப்படி பெரிய பிழைகளை செய்துவிட்டு, இது வெறும் என்ட்ரி ஆர்டர்தான் என்று நீதிமன்ற உத்தரவை சொல்வது, தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+