Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தால் இலவச மின்சாரம் ரத்து ஆகுமா? கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்வாரியத்தில் டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்ப்புகள் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் தனியார் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் விவசாய மின் இணைப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும், காலை 6 மணி முதல் 10 மணி வரை, அதே போல மாலை 6 மணி முதல் 10 மணி வரை கூடுதல் 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அண்மையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் குறித்து கூறுகையில், தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை மத்திய அரசு நிர்பந்தத்தால் தமிழக அரசு அதை ஏற்க இருக்கிறது..இந்த திட்டப்படிமாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய மின் ஊழியர்கள் வீட்டிற்கு போக வேண்டிய தேவை இருக்காது.

Will the TN EB s smart meter installation project result in the cancellation of free electricity

அதே நேரத்தில் சாதாரண மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அலுவலகத்திற்கு வந்து ஃபெனால்டி உடன் ஒரு தொகையை கட்டி சரி செய்து வருகிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் வந்தால் மின் மறு அமைப்பு செய்ய தோராயமாக ரூ.350 முதல் ரூ.400 வரை கட்ட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி பராமரிக்கும் பணியை டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் தான் செய்யும் நிலை ஏற்படும்.

வேலை பறிபோகும்

அதேபோல் மின்சார வாரிய ஊழியர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பணிக்கும் சம்பந்தம் இல்லாத நிலை ஏற்படும் என்றும் இதனால் மின் கணக்கீட்டாளர், கணக்கிட்டு மேற்பார்வையாளர், வருவாய் மேம்பாட்டாளர் பணிகள் கேள்விக்குறியாக மாறும் என்றும் மின் வாரிய ஊழியர்கள் எச்சரிக்கிறார்கள்.

பீக் அவர்ஸ் கட்டணம்

அதேபோல் ஸ்மார்ட் மீட்டர் வந்தால், காலை 6 மணி முதல் 10 மணி வரை, அதே போல மாலை 6 மணி முதல் 10 மணி வரை கூடுதல் 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும் என வர வாய்ப்பு உள்ளதாம். மேலும் காலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை 5 ரூபாய் மின் கட்டணம் இருக்கும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தற்போதைய நிலையில் மீட்டருக்கான கட்டணம் இல்லை. ஸ்மார்ட் மீட்டரில் அது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இலவச மின்சாரம் ரத்து?

தமிழகத்தில் உள்ள 22 லட்சம் பம்பு செட்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற நிலை வரும் என்றும், இதற்கான மானியத்தை நேரடியாக, நேரடி பலன் பரிமாற்றம் (Direct benefit transfer method) மூலம் வங்கி கணக்கில் கொடுப்போம் என்று சொல்கிறார்கள் என்தால், விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் கூறுகிறார்கள். இலவச திட்டத்தில் 82 லட்சம் வீடுகள் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தில் பயன் அடைந்து வரும் நிலையில், அதுவும் ரத்தாக வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கிறார்கள்.

முத்தரசன் எதிர்ப்பு

இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த வேண்டும் என பாஜக மத்திய அரசு வற்புறுத்துவது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கம் கொண்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் மின்சார திருத்தச் சட்டத்தை (2020) மறைமுகமாக செயல்படுத்தும் திட்டமாகும் . டோடெக்ஸ் முறையில் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் மின் நுகர்வோர்கள் தமிழ்நாட்டில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.


மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்கள்

தமிழகத்தில் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் தனியார் நிறுவனமே அதன் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. தற்போது மின் மீட்டர்கள் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இவைகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஏற்கெனவே பெரும் கடன் சுமையால் திணறி வரும் தமிழ்நாடு மின்வாரியம் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்


50000 கோடி செலவு

தமிழகத்தில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தினால் சுமார் ரூபாய் 50000 கோடி செலவு ஏற்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அதானி, அம்பானி போன்ற பெரும் குழும நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்யும். இதன் மூலம் குழும நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுவதற்கு மத்திய அரசு வழிவகை செய்கிறது.

மின் கட்டணம் உச்சம்

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தினால் மீட்டருக்கான வாடகையை தனியார் நிறுவனத்திற்கு மின்வாரியம் செலுத்தும். நாளடைவில் மீட்டர் வாடகையை நுகர்வோரே நேரடியாக செலுத்த வேண்டிய நிலை உருவாகும். தற்போது மின் நுகர்வு நேரத்தில் அடர்த்தியான (peak hours) மின்பயன்பாட்டு நேரம், சாதாரண நேரம் என வகைப்படுத்தி வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு உச்ச பட்ச நேரம் என வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது, இனி வரும் காலங்களில் அனைத்து நுகர்வோர்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்தும் திட்டமாகும்.

இலவச மின்சாரம்

கொசுத் தொல்லை, அளவுக்கு மீறிய வெப்பம், காற்றோட்ட வசதி குறைவு போன்ற காரணங்களால் பெரும்பாலும் மின்சாரம் இன்றியமையாத் தேவையாகியுள்ளது. புதிய கட்டண முறை மின் கட்டணத்தை உயர்த்தும் செயலாகும். இதுவரை விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். விவசாயிகள் செலுத்த வழிவகுக்கும். இதே முறையில் குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டத்திற்கான இலவச மின்சாரம் ரத்தாகும். கைத்தறி, நெசவு ஆகியவற்றிற்கு வழங்கி வருகின்ற மானியமும் கேள்விக்குறியாகும்.

கேரளா ஏற்கவில்லை

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் கணக்கீட்டு பிரிவு பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவதோடு மின் உற்பத்தி, பகிர்மானம், தொடரமைப்பு விநியோகம் என ஒட்டு மொத்த மின் நிர்வாகமும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, தனியார் கைகளுக்கு மாறிவிடும். சமூகநீதி இட ஒதுக்கீடு பறிபோகும்.கேரள அரசு டோடெக்ஸ் முறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, தமிழக மின்வாரியத்தில் டோடெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்," இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+