Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோப்பம் பிடித்த உளவுத்துறை.. ஸ்டாலினுக்கு பறந்த ரிப்போர்ட்.. "இருக்கு.. திமுகவில் கச்சேரி இருக்கு"

உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினிடம் ரிப்போர்ட் ஒன்றினை தந்துள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ரிசல்ட்டை எதிர்நோக்கி தமிழகம் காத்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக தரப்பில் இருந்து 2 முக்கிய தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ, எதுவாக இருந்தாலும் ஆளும் கட்சியே பிரதான வெற்றி பெறும் என்பது நடைமுறை இயல்பு.

அந்த வகையில் திமுகவுக்கே கள நிலவரம் சாதகமாக இருந்த சூழலில், ஆளும் தரப்பை சூடேற்றும் வகையில் அதிமுக சில வியூகங்களை கையில் எடுத்தது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பொய்யான வாக்குறுதி + பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், என்ற 2 அஸ்திரங்கள் அதிமுகவுக்கு பிரச்சாரங்களில் கை கொடுக்கவே செய்தது எனலாம்.. அதனால்தான், தேர்தலில் தீவிரமாக பணிகளை செய்யும்படி ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியினருக்கு உத்தரவிட்டு இருந்தார்... மாவட்ட செயலாளர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் இதே உத்தரவு பிறப்பித்ததுடன், அவரவர் தொகுதிகளில் எல்லோரும் கண்டிப்பாக 100 சதவிகித வெற்றியை பெற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்பட்டது.

 பிரச்சார மந்தம்

பிரச்சார மந்தம்

ஆரம்பத்தில் படுநம்பிக்கையாக இருந்த திமுக தரப்பானது, அதிமுகவின் அதிரடியை பார்த்துதான்,
ஸ்பீடு எடுத்தது.. அதுமட்டுமல்ல, துவக்க பிரச்சாரமே சற்று மந்தமாக இருப்பதாக உளவுத்துறையும் திமுக மேலிடத்துக்கு ரிப்போர்ட் ஒன்றினை அனுப்பியிருந்தது.. அந்த ரிப்போர்ட்டில் சில சீனியர் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பிரச்சாரத்திற்கு செல்லாமல் சுணக்கம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டுதான் ஸ்டாலின் கொந்தளித்து, அனைவருக்கும் ஸ்டிரிக்ட் உத்தரவு பிறப்பித்தார்.

சுணக்கம்

சுணக்கம்

இதற்கு பிறகுதான், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இமேஜ் பிரச்சனையாக உருவெடுத்தது.. எடப்பாடி போகும் ஸ்பீடை பார்த்தால், திமுகவுக்கு இழுக்கு வந்துவிடுமோ என்ற கலக்கத்தையும் தந்தது.. அதற்கு பிறகுதான் திமுக நிர்வாகிகள் ஜரூராக வேலையில் இறங்கினர்.. தேர்தலும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.. நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.. இந்த தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் பெரிதும் நம்புகிறாராம்..

 போனை போட்ட முதல்வர்

போனை போட்ட முதல்வர்

காரணம், தேர்தல் முடிந்ததுமே சனிக்கிழமை இரவே, அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் போனை போட்டாராம் ஸ்டாலின்.. ரிசல்ட் எப்படி இருக்கும்? உங்க மாவட்டத்தில் என்ன பிரச்சனை? என்று விசாரித்து கொண்டே இருந்தாராம்.. அதற்கு அமைச்சர்களும், மாசெக்களும், "தளபதி, ரிசல்ட் நம்மை விட்டு போகாது.. 90 சதவீத வெற்றி நமக்குத்தான்" என்று உறுதியாக தெரிவித்தபடி இருந்திருக்கிறார்கள்...

உளவுத்துறை

உளவுத்துறை

அதேசமயம், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த சம்பவங்கள் குறித்து உளவுத்துறை முதல்வருக்கு ஒரு ரிப்போர்ட் தந்துள்ளது.. அந்த ரிப்போர்ட்டில், கடைசி கட்ட பிரச்சாரம் மெத்தனமாக இருந்ததாகவும், இதற்கு காரணம், ஆளும் கட்சி என்பதால் நாம் தான் ஜெயிப்போம் என்கிற நினைப்பு திமுகவினரிடம் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களையும் திமுகவினர் மிரட்டினர் என்கிற தகவலையும் உளவுத்துறை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளது.

களையெடுப்பு

களையெடுப்பு

இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டாராம் ஸ்டாலின்.. ஆனால், திமுகவினர் எங்கெல்லாம் மெத்தனமாகவும் மமதையாகவும் இருந்தார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து தனியாக வைத்திருக்கிறாராம்.. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு, அதாவது ரிசல்ட் சொதப்பினால் சம்மந்தப்பட்ட திமுகவினர் மீது ஸ்டாலினின் பாய்ச்சல் இருக்கும் என்று திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.. ஆக. மீண்டும் ஒரு களையெடுப்பு விரைவில் திமுகவில் நிகழலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+