பேசாம ஒத்தி வைக்கலாமே.. டிசம்பருக்கு பிறகு பாத்துக்கலாமே.. ஹைகோர்ட் சூப்பர் அட்வைஸ்
பள்ளிகள் திறப்பது குறித்து மதுரை ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது
சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து, மதுரை ஹைகோர்ட் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.. அத்துடன் ஒரு ஆலோசனையையும் கோர்ட் வழங்கி உள்ளது!
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுமையாக அகலவில்லை என்பதால், அரசின் அறிவிப்புக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதனால், இந்த விவகாரம் குறித்து பெற்றோரிடமே கருத்து கேட்கலாம் என்று அரசு முடிவு செய்தது.. அதன்படியே தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், பொதுமக்களிடம் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டமும் நடந்து முடிந்தது.
அப்போது, "குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதால் கொரோனா பரவலும் அதிகரிக்கும், பொங்கல் லீவு முடிந்தபிறகே பள்ளிகளை திறக்கலாம்" என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்... அதாவது இப்போதைக்கு பள்ளி திறக்க கூடாது என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது. பெற்றோர்களின் இந்த முடிவுகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களுக்கு விருப்பமில்லை என்பதால், திட்டமிட்டபடி நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறது.. எனினும், பள்ளிகள் திறப்பு தொடர்பாக நவம்பர் 12-ம் தேதிக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று நேற்று அமைச்சர் செங்கோட்டையனும், பேட்டி தந்திருந்தார். இதையேதான் அமைச்சர் அன்பழகனும் தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பான வழக்கு ஒன்றின் மீது இன்று மதுரை ஹைகோர்ட்டில் விசாரணை நடந்தது.. அப்போது, பள்ளிகள் திறப்பதை ஒத்திவைத்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும் பெற்றோர்கள் கருத்து சொன்னது போலவே, டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே என்றும் அரசுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளது.
கோர்ட் இப்படி ஒரு கேள்வி எழுப்பி ஆலோசனையும் தந்துள்ளதால், மறுபடியும் பள்ளிகள் திறக்கப்படும் முடிவு தள்ளிப்போகுமோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications