ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டிஆர் பாலு வெல்வாரா? பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு... தந்தி டிவி
சென்னை: சென்னையின் ஆலந்தூர், பல்லாவரம்,, தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் என சென்னையின் புறநகர் மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுகவின் டிஆர் பாலு வெற்றி பெற வாயப்பு உள்ளதாக தந்தி டிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, பாமக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கி உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே மொத்தமாக அடித்து தூக்கும் என்றே கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.
தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தந்தி டிவி தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
தொகுதி வாரியான நிலவரத்தை பொறுத்தவரை இந்த செய்தியில் ஸ்ரீபெரும்புதூர் பற்றி பார்க்க போகிறோம். சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பல்லாவரம், தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி, சென்னையில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட தொகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ள தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி இருக்கிறது.
கார் உற்பத்தி தொடங்கி கனரக வாகனங்கள் மற்றும் செல்போன் உற்பத்தி என டெக் மற்றும் ஆட்டோ மொபைல் நகரமாக சென்னை இருக்க ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தான் காரணம். ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஸ்ரீ பெரும்புதூர் லோக்சபா தொகுதியில் திமுக 7 முறையும், காங்கிரஸ் மற்றும் அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இங்கு திமுக சார்பில் போட்டியிடும் கடந்த முறை வெற்றி பெற்ற டிஆர் பாலு இந்த முறையும் வெல்வார் என்றும், டிஆர் பாலு 43 முதல் 49 சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாகவும் தந்தி டிவி தனது கணிப்பில் கூறியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பிரேம் குமார், 33 முதல் 39 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும் பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிடும் வேணுகோபால் 6 முதல் 12 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் வெ ரவிச்சந்திரன் 7 முதல் 10 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும் தந்திடிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications