"டமார்னு" வெடிக்க போகும் பூகம்பம்.. இப்பதான் கூட்டணியே வெச்சாங்க.. சொந்த கட்சிக்குள் சிக்கலா..?
தேமுதிக நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: நடந்து முடிந்ததையும், கசிந்து வரும் தகவல்களையும் வைத்து பார்த்தால், புது கூட்டணிக்குள் விரிசல் வந்துவிடும் போல தெரிகிறது.
தேமுதிகவுடன், பலரும் கூட்டணிக்கு தயங்கிய நிலையில், அமமுக மட்டும் கூட்டணி கதவை திறந்துவைத்தது..
கோவில்பட்டியில் தாம் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநலம் இருந்தாலும், பரவலான வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு, தேமுதிகவுக்கு 60 சீட்டை தந்து வியக்க வைத்தார் தினகரன்.. மேலும் அவர்கள் விரும்பி கேட்ட விருத்தாச்சலம் தொகுதியையும் ஒதுக்கினார். ஆனால், தொகுதி ஒதுக்கீடுகள் நடந்தது முதலே, சில அதிருப்திகள் தேமுதிகவிலேயே நிகழ்ந்தன..!

ஒத்துழைப்பு
விருதாச்சலம் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் பிரேமலதாவுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை போலும்.. பல்வேறு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் எல்லோருமே விருத்தாசலம் தொகுதிக்கு வந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை உத்தரவிட்ட நிலையில், அவர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராமல் தேமுதிக இருந்ததாக தகவல்கள் கிடைத்தன. இதனால் நொந்து போன தேமுதிகவினர், ஆளாளுக்கு கிளம்பி சொந்த ஊருக்கு போய்விட்டதாகவும் சொல்லப்பட்டது.

கோவில்பட்டி
அதேபோல, திமுகவை தோற்கடிக்க வேண்டும், அதிமுகவுக்கு செக் வைக்க வேண்டும், கோவில்பட்டியை வென்று காட்ட வேண்டும் என்ற பல வைராக்கியத்தில் தினகரன் களம் இறங்கிய நிலையில், கூட்டணிக்கு தேமுதிக ஒத்துழைப்பு தரவில்லை என்றும் செய்திகள் வந்தன.. இதற்கு காரணமும் பிரேமலதா தான் என்கிறார்கள்.. அவர் அப்படி மறைமுக உத்தரவு போடவும்தான், தேமுதிக நிர்வாகிகள் அவ்வாறு நடந்து கொண்டனர் என்றும், இது தெரிந்த தினகரன் அப்செட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

பணம்
இப்போது தேர்தலும் முடிந்த நிலையில், இன்னொரு பிரச்சனையும் வெடித்துள்ளதாம்.. கூட்டணியில். கட்சி தலைமையானது, வேட்பாளர்களுக்கு செலவுக்கு பணம் தந்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், முறையாக அவை போய் சேர்ந்தனவா என்றும் தெரியவில்லையாம்.. கொரோனா தொற்று பாதிப்பில் சுதீஷ் இருந்ததால், செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததாம்.. பிரேமலதாவும் விருத்தாசலம் தொகுதியை விட்டு வேறு வேட்பாளர்களையும் பெரிதாக கண்டுகொள்ளவுமில்லை.. பிரச்சாரத்துக்கு மற்ற தொகுதிகளுக்கு வரமுடியாது என்றும் சொல்லி விட்டிருந்தார்.

நிர்வாகிகள்
இதனால் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள், நிர்வாகிகள் இறங்கி வேலை செய்வதில் சுணக்கம் காட்டியபடியே இருந்திருக்கிறார்கள்.. அதனால்தான், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், ஒவ்வொரு வேட்பாளருக்கும், தலா 3 லட்சம் ரூபாய் தருவதாக தலைமையில இருந்து ஒரு தகவல் சென்றதாம்.. என்னது, வெறும் 3 லட்சமா? இதை வைத்து கொண்டு என்ன செய்வது? என்று யாருமே அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்களாம்.

பிரச்சாரம்
கூட்டணி, பிரச்சார சமயங்களிலேயே பல்வேறு அதிருப்திகள் கட்சிக்குள் வெடித்து வருகிறது என்று சொல்லப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள்கூட பூசல்கள் உருவெடுத்திருக்கின்றன.. இதனால், எப்படியும் கட்சிக்குள் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்த கட்சியின் ஒத்துழைப்பு கூட்டணியான அமமுகவுக்கு பூரணமாக கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை..!

மவுன பிரச்சாரம்
விஜயகாந்தின் மவுன பிரச்சாரம் வாக்குகளாக மாறுமா என அதுவும் தெரியவில்லை.. ஆனால், தேமுதிகவின் தன்னிச்சையான செயல்பாடுகளும், பிடிவாதமும் கூட்டணியை நாளை அசைத்து பார்த்துவிடுமா? அல்லது கட்சிக்குள்ளேயே பூசல் வெடிக்குமா? அல்லது கூட்டணி அபார வெற்றி பெற்று திமுக-அதிமுகவுக்கு மாஸ் காட்டுமா? தெரியவில்லை.. பார்ப்போம்!
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications