ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.. இது பாஜக பிளான்! இந்துத்துவாவை நீக்க ஸ்டாலின் இதை செய்யலாமே: பழ கருப்பையா
சென்னை: இனி அடுத்தக்கட்டமாக விஜய், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவை நோக்கி நகருவார்.. ஏற்கனவே விஜய்யை தன்பக்கம் இழுப்பதற்கான வேலையை பாஜகவும் துவங்கிவிட்டது. என்று மூத்த பத்திரிகையாளர் மணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறி வருகிறார்கள்.. இந்நிலையில், பாஜக குறித்து மூத்த தலைவர் பழ.கருப்பையா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Citi Fox Times என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா, "ரோடு ஷோ நடத்துவதற்கு அந்த கட்சிக்கு மட்டும் அனுமதி தரப்படுகிறது, எங்களுக்கு தரப்படுவதில்லை.. அந்த கட்சிக்கு அனுமதி உள்ளது போல எங்களுக்கு கிடைப்பதில்லை" என்றெல்லாம் விஜய் தரப்பினர் ஆரம்பம் முதலே புலம்பி வருகிறார்கள்.

அறியாமை கூட்டம்
மற்ற கட்சிகள் என்பது வேறு, தவெக என்பது வேறு.. மற்ற கட்சிகளுக்கு குறைந்த அளவே கூட்டம் வரும்.. தள்ளுமுள்ளுகளுக்கு அங்கே வேலை இல்லை.. கட்சி தலைவரே பார்த்தே ஆக வேண்டும் என்கிற தவிப்பும் இல்லை.
ஆனால், தவெகவில் எல்லாரும் அறியாத மக்கள், எளிய மக்கள், குழந்தைகள், வயிற்று பிள்ளையோடு வரக்கூடியவர்கள்.. இவர்கள் எல்லாம், தலைவனை பார்க்க வேண்டும் என்று திரண்டு வந்தால் என்னாகும்? அப்படி வரும்போது, கட்சி தலைவர்தான் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஊருக்கு வெளியே பொட்டல் போன்ற இடங்களில் அதாவது மக்கள் நெறிபடாமல் இருக்கக்கூடிய இடங்களில் கூட்டத்தை நடத்தி கொள்கிறோம் என்று கட்சித்தரப்பில் தான் சொல்லியிருக்க வேண்டும்.
பொட்டலில் கூட்டம்
அதற்காக மற்ற கட்சிகளை காட்டி போட்டி போடக்கூடாது.. தங்களுக்கும் அதுபோல கூட்டம் நடத்த அனுமதிவேண்டும் என்று கேட்கக்கூடாது.. காரணம், தவெகவுக்கு வரும் கூட்டம் மயக்கத்தில் வரும் கூட்டம், சிந்தனையில்லாமல் வரும் கூட்டம்.. இந்த பிள்ளைகளுக்கு அறியாமையிலிருந்து விடுபட தெரிவதற்கு வாய்ப்பில்லை.
கூட்டம் நடத்த அனுமதி தரப்பட்டாலும், எனக்கு கூட்டம் நிறைய வரும், நான் வெளியே பொட்டலில் கூட்டத்தை நடத்தி கொள்கிறேன் என்று விஜய் சொல்ல வேண்டியதுதானே?
அதைவிட்டுவிட்டு 8 மணி நேரம் தாமதமாக வந்தால் என்ன அர்த்தம்? தன்னை பார்க்க வந்த கூட்டத்தால் ஊரே குலுங்கியது என்று அனைவரும் பேச வேண்டும் என்ற மனப்பான்மையும்தான் இந்த கரூர் துயரத்துக்கு மற்றொரு காரணமாகும்.
திருகுமுருகு அரசியல்
பாஜக கட்டுப்பாட்டிற்குள் விஜய் சென்றுவிட்டார் என்றெல்லாம் தற்போது பேச்சு வருகிறது.. பாஜக அப்படித்தான் செய்வார்கள்.. நேருவை போன்றவர்கள் நாடாளுகிறவர்களாக இருந்தால் இதுபோன்ற அற்பமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள்..
அமித்ஷா போன்றோரெல்லாம் மிகவும் அடிப்படையிலிருந்து வந்து, திருகுமுருகாக அரசியலை நடத்தி பழக்கப்பட்டவர்கள்.. இதன்காரணமாக இவர்கள், அதிகாரத்தை பயன்படுத்தவே பார்ப்பார்கள்.. அரசியல் என்றால் இப்படித்தான் என்று அவர்களுக்குள் நினைத்து கொள்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, மக்களுக்கு நன்மை செய்வோம் என்ற சிந்தனையைவிட, தன்னுடைய கட்சி நாடு முழுவதும் ஆள வேண்டும், அந்த குடுமி தலைமையில் இருக்கிற தன்னுடைய கையில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. ஆனால் இது நல்ல எண்ணம் கிடையாது.
இந்து சமய அறநிலையத்துறை
எனவே பாஜக எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்றுவது கடினம்.. ஏனென்றால் ஒரு மனிதனை இந்துவாக மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள்.. முஸ்லிம் முஸ்லீமாக இருக்கிறான், கிறிஸ்துவன் கிறிஸ்துவனாக இருக்கிறான். ஆனால் இந்து இந்துவாக இல்லை.. இந்து என்பது உண்டாக்கப்பட்ட ஒரு மதம்.. நாம் சைவம், வைணவமாக இருக்கிறோம்..
சென்ற நூற்றாண்டில்தான், வேத மதத்தை கடைப்பிடிக்கிறவர்கள் பிராமணர்கள், தலைமையானவர்கள்.. மற்றவர்கள் எல்லாம் இந்துக்கள் என்கிறார்கள்.. இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரையே தமிழ்நாட்டில் தூக்க வேண்டும்.. இந்துத்துவா ஓய்ந்துவிடும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்?












Click it and Unblock the Notifications