ஸ்டாலினை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் புஸ்ஸி ஆனந்த்? கொளத்தூர் தொகுதியில்.. களமிறக்க தவெக திட்டம்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொளத்தூர் தொகுதி நீண்ட காலமாகவே முதல்வர் மு.க. ஸ்டாலினின் பலமான கோட்டையாக இருந்து வருகிறது.
இந்த செய்தி உறுதியானால், 2026 தேர்தலில் கொளத்தூர் முக்கிய போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய முகங்களில் புஸ்ஸி ஆனந்த்தும் ஒருவர். அவர் ஏற்கெனவே கட்சி களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, மக்களைச் சந்தித்து கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் பலமான கோட்டை
தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில், முக்கிய தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். கொளத்தூர் எப்போதும் திமுகவின் பாதுகாப்பான தொகுதியாகவே இருந்துள்ளது. 2011ல் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்தே இது ஸ்டாலினின் வெற்றி தொகுதி. புஸ்ஸி ஆனந்த் போன்ற ஒரு புதிய வேட்பாளர், விஜய்யின் செல்வாக்கு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் திரட்டி வரும் இளைஞர்களின் ஆதரவுடன் இங்கே ஸ்டாலினுக்கு ஒரு அளவிற்கு போட்டியாக மாற முடியும்.
கொளத்தூரில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த்
தற்போது இது ஒரு திட்டமாக மட்டுமே உள்ளது. கொளத்தூரில் போட்டியிடுவது குறித்து புஸ்ஸி ஆனந்தோ அல்லது தமிழக வெற்றிக் கழகமோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு முன், கள நிலவரத்தை தமிழக வெற்றிக் கழகம் ஆராய்ந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புஸ்ஸி ஆனந்த், ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிட்டால், தமிழக அரசியலில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் மோதல்களில் ஒன்றாக இது அமையும். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஆளும் முதலமைச்சருக்கும், மாற்றத்தை முன்வைக்கும் புதிய கட்சியின் வளர்ந்து வரும் முகத்திற்கும் இடையிலான ஒரு போட்டியாக இது இருக்கும். 2026 தேர்தல்கள் நெருங்கும்போது, தமிழக அரசியல் விவாதங்களில் கொளத்தூர் நிச்சயமாக முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
தவெகவில் சிக்கல்
அதே சமயம் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி தற்போது ஒரு முக்கிய சவாலை எதிர்கொள்ள தொடங்கி உள்ளது. கட்சியில் விஜய்யைத் தவிர, வேறு பெரிய முகங்கள் இல்லை. இது தொடர்பாக விஜய்க்கும் முக்கியமான மெசேஜ் ஒன்று சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. பொதுவாக, தமிழக அரசியல் கட்சிகளில் பல வலுவான தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் அல்லது நன்கு அறியப்பட்ட பொது முகங்கள் இருப்பார்கள். இவர்கள் தேர்தல்களில் போட்டியிடக்கூடியவர்கள். இத்தகைய தலைவர்கள் கட்சி மக்களைச் சென்றடையவும், உள்ளூர் ஆதரவைப் பெறவும் உதவியாக இருப்பார்கள்.
விஜய் - தமிழக வெற்றிக் கழகம்
எம்ஜிஆர் அரசியலில் வந்து ஜெயிக்க காரணம்.. அவருடன் பல திமுக தலைவர்கள் உடன் இருந்தனர். திமுகவில் இருந்து வெளியேறிய டாப் தலைவர்கள் அவருடன் உடன் இருந்தனர். அதேபோல்தான் ஜெயலலிதாவிற்கும் உதவியாக பல மூத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில், கிட்டத்தட்ட அனைத்து கவனமும் விஜய் மீதே குவிந்துள்ளது. இது கட்சிக்கு ஒரு வலுவான வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளவர்களில் பலர் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியலுக்குப் புதியவர்கள். திமுக, அதிமுக அல்லது பிற கட்சிகளின் வலுவான வேட்பாளர்களுடன் போட்டியிட அவர்களுக்குப் போதிய அனுபவம், நிதி ஆதாரம் அல்லது பொது செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். இதனால், பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களை யார் வழிநடத்துவார்கள், உள்ளூர் பிரச்சனைகளைப் புரிந்துகொண்ட தலைவர்களைக் கட்சியால் ஈர்க்க முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
-
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்











Click it and Unblock the Notifications