அத்திப்பட்டு முதல் ஆந்திரா எல்லை வரை.. அடியோடு மாறுது.. கும்மிடிப்பூண்டியில் ரயில்வே சூப்பர் முடிவு
சென்னை: சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில் பாதைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பாதை வழியாக மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. . எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்லும்போது, மின்சார ரெயில்கள் சிக்னல்களில் ஓரம்கட்டப்படும். 40 நிமிடங்கள்வரை கூட நிற்கப்படும். இதனால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் தினமும் அவதிப்படுகிறார்கள். அவர்களின் குறை தெற்கு ரயில்வேக்கு கேட்டுவிட்டது. அத்திப்பட்டு புதுநகர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான 25 கி.மீ தூரத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தெற்கு ரயில்வேயின் தலைமையகம் உள்ளது. தெற்கு ரயில்வே மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்பட தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் கீழ் பல்வேறு கோட்டங்கள் உள்ளன. அதில் சென்னை ரயில்வே கோட்டம் அதிக வருவாய் ஈட்டும் கோட்டமாக இருக்கிறது. சென்னை , திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

மின்சார ரயில்கள்
சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கம், சென்னை சென்ட்ரல்-பொன்னேரி- கும்மிடிப்பூண்டி மார்க்கம், சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கம், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கம் ஆகிய மார்க்கங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் சென்னைக்கு மட்டுமின்றி சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வேலைக்காகவும், கல்விக்காகவும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் நகரத்துக்கு வந்து செல்லவும் உதவுகிறது.
என்ன சிக்கல்
சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கம், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தை பொறுத்தவரை பிரச்சனை பெரிய அளவில் இருக்காது. ஆனால் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கம், சென்னை சென்ட்ரல்-பொன்னேரி- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அடிக்கடி மின்சார ரயில்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை சென்ட்ரல்-பொன்னேரி- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டுக்கு அடுத்து இரண்டு பாதைகளே உள்ளதால், மின்சார ரயில் சேவைகள் குறைவாகவே உள்ளன. வரும் மின்சார ரயில்களும் சிக்னலுக்காக காத்திருக்கும் நிலை தொடர்கிறது.
கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில் பாதைகள்
அதாவது சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி தடத்தில் 2 ரயில் பாதைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த பாதை வழியாக மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்லும்போது, மின்சார ரெயில்கள் சிக்னல்களில் ஓரம்கட்டி நிறுத்தப்படும் நிலை தொடர்கிறது. இதனால் இந்த தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுவது தொடர்கிறது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள், குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.இதுதவிர அடிக்கடி பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையும் தொடர்ந்தது.
3வது, 4வது ரயில் பாதை
எனவே, இந்த தடத்தில் கூடுதலாக ரயில் பாதை அமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் 2022-ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் கூடுதல் பாதை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே 3, 4-வது ரயில் பாதை அமைக்கக்கோரி தெற்கு ரெயில்வே சார்பில் மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் கூடுதலாக 2 ரெயில் பாதைகளை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி பாதையில் எளிது
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரையிலான 46 கி.மீ. பயணத்துக்கு ரயில்கள் இரண்டு மணி நேரம் ஆகும் நிலையில், புதிய பாதைகள் அமைக்கப்பட்டால் வெறும் 70 நிமிடத்திலேயே போய்விட முடியும். தற்போதைய நிலையில், அத்திப்பட்டுக்கு அப்பால், விரைவு ரயில்கள் கடந்து செல்வதற்காக புறநகர் ரயில்கள் அடிக்கடி நிலையங்களில் நிறுத்தப்படுவதுதான் பெரிய தலைவலியாக இருக்கிறது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications