Vijay sangeetha: நாளைக்கு டைவர்ஸ் கேஸ்.. கோர்ட்டில் ஆஜராவாரா விஜய்! செட்டில்மெண்ட் கேட்ட சங்கீதா? பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல் அமைச்சர்ருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை இருவரும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜரான நிலையில், இந்த முறை சங்கீதா விசாரணைக்கு ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் திரை உலகில் இளைய தளபதியாக இருந்து, தளபதியாக மாறி தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார் விஜய். விஜய்க்கும் அவரது ரசிகையாக இருந்த சங்கீதாவுக்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Vijay Divorce Case

லண்டன் வாழ் இலங்கை தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதா விஜயை சந்திக்க வந்தபோது பழக்கமான நிலையில், இரு குடும்பத்தினரும் பேசி திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விஜய் சங்கீதா

சஞ்சய் தற்போது சிக்மா படத்தை இயக்கி இருக்கிறார். இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வந்த போதிருந்தே சங்கீதா விஜய் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், விரைவில் அவர்கள் பிரியலாம் என தகவல்கள் வெளியானது. அதற்கேற்றார் போல் விஜய்யின் திரைப்பட நிகழ்வுகளிலும் அரசியல் நிகழ்வுகளிலும் சங்கீதா பங்கேற்கவில்லை.

விவாகரத்து

இதற்கிடையே விஜய் சங்கீதா தம்பதியின் 27 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்தது. பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதால் விஜையிடமிருந்து விவாகரத்து தர வேண்டும் என திடீரென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சங்கீதா. இருவரும் மனமுவந்து பிரிவதாக அறிவித்த நிலையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் 250 கோடி ரூபாய் வரை தனக்கு செட்டில்மெண்ட் தரவேண்டும் என சங்கீதா கேட்டதாக சொல்லப்படுகிறது.

குடும்ப நல நீதிமன்றம்

இதற்கிடையே டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

வீடியோ கான்ப்ரன்ஸ்

கடந்த ஜூன் 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சங்கீதா தரப்பு வழக்கறிஞர்களிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்ப்ரன்ஸ் மனுவில் மெயில் ஐடி ஏன் குறிப்பிடவில்லை.

நாளை ஆஜராவாரா?

இதனையடுத்து விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்திற்கு தான் அனுப்ப வேண்டும் என கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஒத்திவைத்தார். இந்நிலையில் நாளை மீண்டும் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு விசாரணைக்கு வர உள்ளது. இதுவரை மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சங்கீதா - விஜய் தரப்பு நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நாளை விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் விஜய் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது .அதே நேரத்தில் சங்கீதா கோர்ட்டில் ஆஜாராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+