Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் படம் வெளியாகுமா? ஆகாதா? கோர்ட்டில் நாளை என்ன நடக்கும்? 4 சுவாரசியமான பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி 20 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் 'ஜனநாயகன்' வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் என்னெவெல்லாம் நடக்க வாய்ப்புகள் உள்ளன.. அதன் முடிவுகள் எப்படி இருக்கும்.. படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதா என்பதை இங்கே பார்க்கலாம்!

ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய தணிக்கை குழுவின் முக்கியமான வாதம் ஒன்றுதான் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vijay tvk jananayagan

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எப்படி தயாரிப்பு நிறுவனம்... பொய்யாக ஒரு அவசரநிலையை காட்டி எப்படி படத்தை இவர்கள் ரிலீஸ் செய்ய சொல்லலாம். சிபிஎப்சி அமைப்பிற்கு இவர்கள் நேரம் கொடுத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக எப்படி ஒரு படத்திற்கு சர்டிபிகேட் வழங்க முடியும். கட் செய்யப்பட்ட காட்சிகளை பார்க்காமல்.. படத்தை எப்படி ரிலீஸ் செய்ய சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார்.

ஜனநாயகன் வழக்கு

இதற்கு ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தின் வெளியீட்டை ஒரு அதிகாரி மட்டுமே எதிர்த்தார். மற்ற அதிகாரிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு கூறவில்லை, என்று வாதம் வைத்தனர்.

இதற்கு மத்திய தணிக்கை குழு கொடுத்த பதிலில், தனி நீதிபதி படத்திற்கு நேரடியாக அனுமதி கொடுத்துவிட்டார். படத்திற்கு சர்டிபிகேட் கொடுக்க CBFCக்கு உத்தரவிட வேண்டும் என்றுதான் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் கேட்டது. ஆனால் அவர்கள் கேட்காமலே.. படத்திற்கு u/a சர்டிபிகேட் கொடுத்துள்ளது கோர்ட். இதை தயாரிப்பு நிறுவனம் கோரிக்கையாக வைக்கவில்லை.

இதில் எங்களுக்கு பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நேரம் தரப்படவில்லை. தணிக்கை குழுவின் உறுப்பினர், சேர்மன் படத்திற்கு எதிராக ரிவைசிங் அனுப்ப முடியும். ஆனால் அந்த உரிமையை நீதிபதி நீக்கி உள்ளார். அதோடு அவர்கள் பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே அவசரமாக விசாரிக்கப்பட்டு.. மறுநாள் ஒரு நாள் மட்டும் டைம் கொடுத்து.. அதற்கு மறுநாளே தீர்ப்பு வழங்கி உள்ளனர் என்று வாதம் வைத்தார். இந்த வாதம் வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

ஜனநாயகன் வழக்கு - அடுத்து என்ன நடக்கும்?

இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்!

முதல் சாத்தியக்கூறு: தயாரிப்பாளர்கள் ரிவிஷன் குழுவிடம் படத்தை கொண்டு செல்ல ஒப்புதல் அளித்து, அதன் முடிவுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்க நீதிமன்றத்தைக் கோரலாம். ஆனால், முதல் குழுவின் பரிந்துரைகளிலிருந்து தணிக்கை வாரியத் தலைவர் முரண்பட்டு, இரண்டாவது மறுஆய்வுக் குழுவை அமைத்தால், சான்றிதழ் செயல்முறை தாமதமாகும் ஆபத்து உண்டு.

இரண்டாவது சாத்தியக்கூறு: திருத்தக் குழுவுக்கு சம்மதிக்காமல், தயாரிப்பாளர்கள் ரிட் அப்பீல் மீது வாதிடத் முடிவு செய்தால், தலைமை நீதிபதி அமர்வு அப்பீலை ஏற்று, தனி நீதிபதி படத்திற்கு சான்றிதழ் வழங்க கொடுத்த உத்தரவை ரத்து செய்யலாம். இத்தகைய உத்தரவை தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

மூன்றாவது சாத்தியக்கூறு: தலைமை நீதிபதி அமர்வு வழக்கை தனி நீதிபதியின் மறுவிசாரணைக்கு அனுப்பலாம். தணிக்கை வாரியம் மறுப்பு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய கால அவகாசம் பெறும். இதனால், விசாரணை முதலில் இருந்து தொடங்கும். தனி நீதிபதியின் உத்தரவு டிவிஷன் பெஞ்ச், உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யப்படும் என்பதால், திரைப்படம் வெளியாக பல மாதங்கள் ஆகும்.

நான்காவது, மிக அரிதான சாத்தியக்கூறு: தலைமை நீதிபதி அமர்வு ரிட் அப்பீலை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியின் U/A 16+ சான்றிதழ் உத்தரவை நிலைநிறுத்தலாம். இங்கும்கூட, தணிக்கை வாரியம் டிவிஷன் பெஞ்சின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உண்டு.

சட்டம் சார்ந்த வழக்குகள் கால விரயம் செய்பவை. விரைவான தீர்வு வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களுக்குள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வதே மிகச் சிறந்தது என்று பரவலாகக் கருதப்படுகிறது. இதனால் விஜய் - தயாரிப்பாளர் தரப்பு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+