திமுகவிற்கு பெரிய ஆப்பு வைக்கும் ராகுல் காந்தி.. அப்படி என்ன கோபமோ தெரியலையே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைஅகில இந்திய அளவிலான இந்தியா கூட்டணியில் இணைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்குமாறு, காங்கிரஸ் எம்பிக்களும் தலைவர்களும் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ராகுல் காந்தியும் இதற்கான திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்துப் பேச எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், தேசிய மற்றும் மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன.

rahul gandhi congress

மிஷன் 2029: காங்கிரஸின் புதிய வியூகம்

காங்கிரஸ் கட்சியின் இந்த முயற்சி, அகில இந்திய அளவில் காங்கிரஸ் சார்பாக உருவாக்கப்பட்டு உள்ள மிஷன் 2029 என்ற வியூகத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. வரும் 2029 பொதுத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதையும், அதற்கேற்ப தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை மீண்டும் வலுப்படுத்துவதையும் இந்த வியூகம் இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த பணிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கான 10 நாள் சிறப்புப் பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் செல்லக்குமார் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளுக்கு எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும், கூட்டணி அமைத்தல் குறித்தும் ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்

ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிறைவு விழாவில் ராகுல் காந்தி நேரில் பங்கேற்கவுள்ளார். அவர் சென்னை வரும் அதே வேளையில், தவெக தலைவர் விஜய்யுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடக்கூடும் என்ற செய்திகள் கட்சி வட்டாரங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

ராகுல் - விஜய் இடையிலான நட்பு

ராகுல் காந்தி மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே ஒரு சுமுகமான தனிப்பட்ட நட்பு நிலவி வருகிறது. முன்னதாக, விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி நேரில் கலந்துகொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்ட விஜய், ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் சென்று அவருடன் உணவு அருந்தினார்.

மேலும், டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தபோது ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பகிரங்க அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் காங்கிரஸ் மற்றும் தவெக ஆகிய இரு அரசியல் அமைப்புகளுக்கும் இடையே கொள்கை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் நட்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில் திருப்புமுனையா?

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டு, இந்த நட்பை மேலும் வலுப்படுத்த பல காங்கிரஸ் எம்பிக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக ராகுல் காந்தி, விஜய்யுடன் நேரடியாகப் பேசி சில முக்கிய நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.. அதில் முக்கிய விஷயம் இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை முறைப்படி அதிகாரப்பூர்வமாக இணைத்தல் என்று கூறப்படுகிறது. இதனால் திமுக அதிகாரபூர்வமாக இந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்படும்!

மாமல்லபுரம் காங்கிரஸ் பயிற்சி முகாமின் நிறைவு நாளில் ராகுல் காந்தி பேசவுள்ள உரையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் விஜய் சந்திப்பும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் கூட்டணியின் திசையைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+