சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ட பாடெல்லாம் போச்சே.. "வெறும் 2 சீட்டுக்காக".. அதிர வைக்கும் தேமுதிகவின் கதி!

தேமுதிக தன்னுடைய அங்கீகாரத்தை இழக்க நேரிடும் சூழல் உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மிகப்பெரிய சிக்கலில் தேமுதிக உள்ளது.. மொத்தம் 2 விஷயங்களில் சிக்கி கொண்டுள்ளது.. அதில் இருந்து மீண்டு வெளியே வர வேண்டும் என்பதே அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த்... எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்... ஆனால் அவரது கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 ஆக குறைந்து போய் விட்டது.

அடுத்து அதிமுகவுடன் மோதினார். அதில் அதிமுகவே கை ஓங்கியது... பலவீனமாக மாறியது தேமுதிக... 2015 லோக்சபா தேர்தலில் பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது..

 மெகா கூட்டணி

மெகா கூட்டணி

இத்தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்விதான்... அதனால், வாக்கு சதவீதமும் 5.1 சதவீதமாக இறங்கி போனது. இத்தனைக்கும் அது மெகா கூட்டணியாக அமைந்தது. 2016ல் தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுக்க திமுக முயன்றது... திமுக தலைவர் கருணாநிதி, விஜயகாந்த்தை கூட்டணிக்குள் கொண்டு வர கடுமையாக முயன்று பார்த்தார். ஆனால் மக்கள் நலக் கூட்டணி என்ற வலைக்குள் போய் சிக்கிக் கொண்டார் விஜயகாந்த். வாக்கு வங்கி மேலும் சரிந்து 2.39 ஆக இறங்கிப் போய் விட்டது.

 எம்பி

எம்பி

கடந்த எம்பி தேர்தலில் இன்னும் மோசமாகி விட்டது நிலைமை... பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சேருவதற்கு முன்பு செய்த பிடிவாதங்கள், பந்தா, பேரம் உள்ளிட்டவை மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டன. மக்கள் தேமுதிகவை தூக்கி போட்டு விட்டனர்... வெறும் 2.19 சதவீத வாக்குகளுடன் படு மோசமான நிலைக்குப் போனது தேமுதிக.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

அத்தனை அரும்பாடுபட்டு கட்சியை உருவாக்கி வளர்த்துக் கொண்டு வந்தார் விஜயகாந்த். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரின் தவறான முடிவுகள், வழிகாட்டுதல்கள், உரிய நேரத்தில் எடுக்கத் தவறிய முடிவுகள், வெட்டி பந்தா, மக்களை மதிக்காத போக்கு, கொள்கையே இல்லாமல் எல்லாக் கட்சியுடனும் பேரம் பேசியது என்று தேமுதிகவை மக்கள் அருவெறுக்கத்தக்க கட்சியாக மாற்றி விட்டார்கள். தற்போது மாநிலக் கட்சி அந்தஸ்து பறி போவதால் முரசு சின்னமும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாமக

பாமக

இப்போதும் சிக்கல் நீடிக்கிறது.. தமிழகத்தை பொறுத்தவரை, மாநில கட்சிகள், அதிமுக, திமுக, தேமுதிக போன்றவைதான்.. இந்த 3 கட்சிகள்தான் தேர்தல் கமிஷனில், அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக இருக்கின்றன.. மற்றவை எல்லாம் ரிஜிஸ்தர் செய்த கட்சிகளாக மட்டுமே உள்ளன. தொடர் சரிவுகள் இருந்தாலும், ஏற்கனவே பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில், தேமுதிக தேர்தல் கமிஷனில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே இன்னமும் இருக்கிறது. இது ஒன்றுதான் அக்கட்சிக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

 2 எம்எல்ஏக்கள்

2 எம்எல்ஏக்கள்

ஆனால் வரப்போகும் தேர்தலில் 8 சதவீதம் முதல் குறைந்தது 6 சதவீத ஓட்டுக்களையாவது தேமுதிக பெற வேண்டும்.. 2 எம்எல்ஏக்களையும் அத்துடன் சேர்த்து பெற வேண்டும்... இல்லாவிட்டால், அந்த கட்சி தன்னுடைய அங்கீகாரத்தையும் முரசு சின்னத்தையும் இழக்க நேரிடும் நிலைமையில் உள்ளது. இப்படித்தான், ஏற்கனவே, பாமக, மதிமுக கட்சிகள், இதுபோன்று அங்கீகாரத்தை இழந்தன.. அதனால் இந்த கட்சிகளும் தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெறுவதற்கு குறைந்தது, 8 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்...

தனித்துவம்

தனித்துவம்

இதில் தேமுதிகதான் சிக்கலாக இருக்கிறது.. இதுவரை கூட்டணி முடிவாகவில்லை.. அதிமுக, திமுக பக்கம் போக முடியாத நிலைமை தேமுதிகவுக்கு வந்துவிட்டது.. சசிகலாவை இன்று பிரேமலதா சந்தித்து பேச போவதாக ஒரு பேச்சு எழுகிறது.. அமமுகவுடன் கூட்டணி வைப்பது தவிர வேறு நிலைமை அக்கட்சிக்கு இல்லை. அதேசமயம், தனித்து நிற்கவும் துணிவில்லாமல் இருப்பதாக தெரிகிறது. எத்தனையோ அரும்பாடுபட்டு கட்சியை உருவாக்கி வளர்த்துக் கொண்டு வந்தார் விஜயகாந்த்..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

ஆனால் அவருக்கு பிறகு, கட்சிக்குள் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள், வழிகாட்டுதல்கள், உரிய நேரத்தில் எடுக்க தவறிய முடிவுகள், கொள்கையே இல்லாமல் எல்லாக் கட்சியுடனும் பேரம் பேசியது, மக்களுடன் மக்களாக நின்று போராட தவறியது, என்று தேமுதிக தன்னையே சிதைத்து கொண்டுவிட்டது.. இப்போதாவது, விஜயகாந்த்தின் பெயரை காப்பாற்றி, அந்த கட்சிக்கு மூச்சு தர தேமுதிக தலைமை மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கட்சி

கட்சி

ஆனால் பிரேமலதா இன்னும் கூட வீராப்பாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார். கட்சியின் பலம், எதார்த்த நிலை, தொண்டர்களின் விருப்பம் என எதையுமே அவர் ஆராய்வதாக தெரியவில்லை. மாறாக தன் போக்குக்கு அனைவரும் இறங்கி வர வேண்டும் என்றே நினைப்பதாக தெரிகிறது. ஆனால் தேமுதிகவின் நிலையும், பலமும் திமுக அதிமுகவுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அவர்கள் போக்குக் காட்டி வருகின்றனர். இதனால் தேமுதிகவின் நிலை ரொம்பவே பரிதாபமாகத்தான் உள்ளது.

English summary
Will Vijayakanths DMDK lose his recognition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X