Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தல்.. அப்போ பொன்முடி தொகுதிக்கு..? சத்யபிரதா சாகு பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி.. காங்கிரஸ் கொறடாவாக இருந்த விஜயதாரணி, சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார்.

Will Vilavancode by election take place along with Lok Sabha election what Satyabrata Sahoo says

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் இருப்பினும், காங்கிரஸ் அவருக்கு வாய்ப்பு வழங்க ரெடியாக இல்லை என்பதால் அவர் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் விளவங்கோடு எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

விளவங்கோடு: இதனால் விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் சில வாரங்களில் நடக்கும் நிலையில், அத்துடன் விளவங்கோடு தொகுதிக்கும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இது தொடர்பாக முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் அதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. அதன்படி இன்று காலை சென்னையில் சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 700 பேர் இதில் கலந்து கொண்டனர்.

சாகு: இந்த நிகழ்ச்சியில் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, "100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பேரணி நடக்கிறது. தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்த பேரணியில் 700 பேர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதே இந்த சைக்கிள் பேரணியின் நோக்கமாகும். உடனடியாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா இல்லையா எனப் பாருங்கள்.. இல்லையென்றால் உடனடியாக உங்கள் பெயரைச் சேருங்கள். அதற்கு கால அவகாசம் இருக்கிறது" என்றார்

தொடர்ந்து பேசிய அவர், "லோக்சபா தேர்தல் உடன் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் நடக்குமா என்பதைத் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக சட்டசபையில் இருந்து கடிதம் வந்ததும், அதைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம்.. அவர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய முடிவை எடுப்பார்கள்.

பாதுகாப்பு: தேர்தல் பணிகளுக்காக ராணுவப் படை தமிழகத்திற்கு எப்போது வரும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஏற்கனவே ராணுவ படை தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டனர். சென்னையில் இரண்டு கம்பெனி பாதுகாப்புப் படை வந்துள்ளனர். கடந்த 1ஆம் தேதி 15 கம்பெனி படை வந்தனர். வரும் 7ஆம் தேதி கூடுதலாக 10 கம்பெனி படை பாதுகாப்புப் பணிகளுக்காக வர உள்ளனர்" என்றார்.

மேலும், தேர்தல் நடத்தை விதிகள் வரும்போது மத வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் நடத்தக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், யாராவது அப்படி பிரச்சாரம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பொன்முடி தொகுதி: முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டுள்ளதால் அவர் தனது பதவியை இழந்துள்ளார். இதனால் அவரது திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவித்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் விடுத்துள்ளது. இது குறித்த கேள்விக்கு, "திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+