Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா பட்ட பாடெல்லாம் வீண் போகல.. தென் மாவட்டங்களில் செம குஷி.. பலே எடப்பாடி பழனிசாமி.. அப்போ பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விகே சசிகலாவின் அரசியல் வேகம் சூடுபிடித்துள்ளது.. அந்தவகையில் 2 வகையான மாறுதல்களை, சசிகலா தரப்பில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

சசிகலா சிறையிலிருக்கும்போது துவங்கப்பட்டது அமமுக என்ற கட்சி.. பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவுக்காக ஒதுக்கி வைத்திருந்தார் டிடிவி தினகரன். ஆனால், சிறையிலிருந்து வெளிவந்ததுமே, தினகரனுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.. முக்குலத்தோர் வாக்குகளை அள்ளுவதற்கு சித்தியின் தயவு தேவை என்று காத்திருந்த தினகரனுக்கு இது பெருத்த ஏமாற்றத்தையே தந்தது.

Sasikala Edappadi Palanisamy south tamil nadu

திவாகரன்: இதற்கு பிறகு அமமுக நிர்வாகிகளையும், சசிகலா தரப்பினருடன் சேரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டாராம் தினகரன்.. இதேபோல, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், மூத்த தலைவருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமணத்திலும் சசிகலா பங்கேற்காமல் போனார். அதேபோல ஓபிஎஸ் கூட்டியிருந்த மாநாட்டிலும், சசிகலா பங்கேற்காமல் போனார். இதற்கெல்லாம், சகோதரர் திவாகரனே பிரதான காரணம் என்றார்கள்.

எடப்பாடி பழனிசாமியுடன் திவாகரனுக்கு நெருக்கம் இருந்ததால்தான், மேற்கண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள விடாமல் தடுத்துவிட்டதாக காரணங்கள் சலசலக்கப்பட்டன. இப்போது விஷயம் என்னவென்றால், சசிகலாவுடன் தினகரன் மற்றும் திவாகரன் குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. எடப்பாடி பழனிசாமியை சமாளிக்க வேண்டுமானால், முதலில் குடும்ப ரீதியான ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்தே, தினகரனை சரிக்கட்டும் வேலையில் இறங்கினாராம் திவாகரன்..

ஆதரவாளர்கள்: இதையடுத்தே சசிகலாவின் அரசியலில் 2வது இன்னிங்ஸ் ஆரம்பமாகியிருக்கிறதாம். தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பதற்காக, இன்று முதல் சுற்றுப்பயணத்தை துவங்கியிருக்கிறார் சசிகலா.

தென்காசியில், அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.. தென்காசி நகர் முழுக்க அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன... ஈனா விலக்கு பகுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான ஆதரவாளர்கள், காத்திருந்தார்கள்.. செண்டை மேளங்கள் முழங்க சசிகலாவுக்கு மாலை, பொன்னாடைகள் அணிவித்துள்ளனர்.

என்ன காரணம்: சசிகலாவின் இந்த பயணத்திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு தந்ததே திவாகரன் தானாம்.. இந்த பயணத்திட்டத்தில் தினகரனும், ஓபிஎஸ்ஸும் இணையவிருப்பதாக கூறுகிறார்கள்.. இந்த பயணங்கள் வாயிலாக, தென்மண்டலத்தில் பலத்தை காட்ட நேரிடும்போது, அதிமுகவில் இது கவனம் ஈர்க்கப்படும் என்று சசிகலா தரப்பில் நம்பப்படுகிறது.

அந்தவகையில் சசிகலாவின் பயண விவரம் புது தெம்பை தென்மாவட்டங்களில் ஏற்படுத்தி வருகிறது.. டிடிவி, சசிகலா, ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைக்கலாம் என்று மூத்த நிர்வாகிகள் எப்போது சொன்னாலும், அதற்கு மறுப்பு சொல்லியபடியே இருக்கிறார்.. அந்தவகையில், தற்போது சசிகலா முன்னெடுத்துள்ள பயணங்கள், எந்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

ஆலோசனை: இதனிடையே நிர்வாகிகளின் ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார்.. தொடர் தோல்விகள், வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் வியூகம் போன்றவை குறித்தெல்லாம் நிர்வாகிகளிடம் பேசப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் நிர்வாகிகளின் வலியுறுத்தல்கள், தொண்டர்களின் எண்ண ஓட்டம், போன்றவற்றை கவனத்தில் கொண்ட எடப்பாடி பழனிசாமி, "கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ளுவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினாராம். ஆனால், சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைக்கும் எண்ணம் குறித்து எந்த கருத்தையும் இதுவரை அதிமுக தரப்பு வெளியிடவில்லை.

பாஜக பிளான்: எனினும், எடப்பாடி பழனிசாமியின் இந்த பிடிவாதம் தொடர்ந்தால், சசிகலா + திவாகரன் + தினகரன் + ஓபிஎஸ் இவர்களின் முக்குலத்தோர் செல்வாக்கை வைத்தே, அதிமுகவை வீழ்த்த, தமிழக பாஜக இப்போதே தீவிரமாக கணக்கு போட்டு வருகிறதாம்.

ஆக, சசிகலாவின் எழுச்சியில் தென்மண்டலங்களில் மாற்றம் வரப்போகிறதா? அமமுகவுக்கு அவரது பயணம் கை கொடுக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+