Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்களால் உங்களது ஊதியம் குறையுமா? பொருளாதார எக்ஸ்பர்ட் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்களால் உங்களது ஊதியம் குறையுமா என்ற பலரின் கேள்விக்கு இங்கே பதில் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த புதிய சட்டத்தால் என்னென்ன நன்மைகள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்கள் - உங்கள் சம்பளம் குறையுமா?

tamil nadu labour india

முக்கிய மாற்றங்கள்

இந்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 புதிய சட்டங்களாக மாற்றியுள்ளது. இது 40 கோடி ஊழியர்களை பாதிக்கும் மிகப்பெரிய சீர்திருத்தம்.

சம்பளத்தின் புதிய வரையறை (Definition of Wages)

உங்கள் மொத்த சம்பளத்தில் (CTC) குறைந்தபட்சம் 50% அடிப்படை சம்பளமாக (Basic Pay) இருக்க வேண்டும்.

உதாரணம்:

நீங்கள் மாதம் ₹1,00,000 சம்பளம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்:
பழைய முறை:
- Basic Pay: ₹30,000 (30%)
- HRA: ₹25,000
- Special Allowance: ₹25,000
- Other Allowances: ₹20,000

புதிய முறை:

- Basic Pay: ₹50,000 (50% கட்டாயம்)
- HRA: ₹20,000
- Special Allowance: ₹20,000
- Other Allowances: ₹10,000

உங்களுக்கு என்ன மாற்றம்?

1. கையில் வரும் சம்பளம் குறையலாம்
காரணம்:

Basic Pay அதிகரிப்பதால் PF பிடித்தம் அதிகரிக்கும்
PF = Basic Pay ல் 12% (நிறுவனம்: 12% of basic minus ₹1,250)

உதாரணம்:

பழைய முறையில்: PF பிடித்தம் = ₹30,000 × 12% = ₹3,600 புதிய முறையில்: PF பிடித்தம் = ₹50,000 × 12% = ₹6,000 மாத வித்தியாசம் = ₹2,400 குறைவு

2. எதிர்கால பலன்கள் அதிகரிக்கும்

நன்மைகள்

அதிக PF சேமிப்பு
அதிக Gratuity தொகை
அதிக பென்ஷன் (If you have chosen any pension plans)

உதாரணம்

Gratuity கணக்கீடு: பழைய: (₹30,000 × 15 × 5) / 26 = ₹86,538
புதிய: (₹50,000 × 15 × 5) / 26 = ₹1,44,230
வித்தியாசம் = ₹57,692 கூடுதல்!

புதிய உரிமைகள்

1. Health Check-ups

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச வருடாந்திர பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

2. நிரந்தர ஊழியர் பலன்கள்

ஒப்பந்த ஊழியர்களுக்கு (Fixed-term employees) 1 வருடத்திலேயே Gratuity (முன்பு 5 வருடம்)

3. வேலை நேரம்

  • வாரத்திற்கு 48 மணி நேரம் (அதிகபட்சம்)
  • நாளொன்றுக்கு 8-12 மணி நேரம்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் சம்பள விவரங்களை மீண்டுமொருமுறை சரிபார்க்கவும்

  • Basic Pay எவ்வளவு உள்ளது?
  • 50% ஆக உள்ளதா?

2. நிதி திட்டமிடலை மாற்றவும்

உதாரணம்: கையில் வரும் சம்பளம் ₹2,400 குறைந்தால்: - மாத செலவு பட்ஜெட்டில் மாற்றம் செய்ய வேண்டும். - SIP தொகையை குறைக்கவும். - அல்லது கூடுதல் வருமானம் ஈட்ட திட்டமிடவும்

3. உங்கள் HR ரிடம் இந்த கேள்விகளை முன்வைக்கலாம்.

  • புதிய சம்பள கட்டமைப்பு பற்றி விளக்கம்
  • Leave encashment விவரங்கள்
  • Overtime குறித்து தெளிவு பெறுங்கள்

பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் உங்களது HR ஐ உடனே அணுகி கேள்வி கேட்க வேண்டாம். Am sure that they will be working on this already. அவர்களே இதற்கான clarifications கொடுப்பார்கள். அதுவரை காத்திருக்கவும்.

48 மணி நேர உச்சவரம்பை பின்பற்ற பெரு நிறுவனங்கள் கொஞ்சம் மாறுதல்களை செய்யலாம். ஒரு சில நிறுவனங்களில் தற்போது ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை கட்டாயமாக உள்ளது. இதில் சில மாற்றங்கள் வரலாம்.

Long term view

நல்ல விஷயங்கள்:

- ஓய்வுக்கால பாதுகாப்பு அதிகரிக்கும்
- சமூக பாதுகாப்பு வலுவாகும்
- வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்

சவால்கள்

ஆரம்பத்தில் பணப் பற்றாக்குறை
வருமான வரி அதிகரிக்கலாம்
திடீர் மாற்றத்திற்கு பழக நேரம் தேவை

மொத்தத்தில்...

இது ஒரு short-term pain, long-term gain நிலைமை. முதல் சில மாதங்கள் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்"
இந்த மாற்றங்களை நேர்மறையாக பார்த்து, உங்கள் நிதி திட்டமிடலை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+