111 கி.மீ வேகத்தில் வீசிய காற்று.. சுழன்றடித்து கரையை கடந்த தீவிர புயல் கஜா!
Recommended Video

சென்னை: கஜா புயல் இன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான கஜா, நான்கு நாட்களாக மெல்ல, மெல்ல நகர்ந்து வந்து, இன்று அதிகாலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.

அப்போது அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் தான் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வரையில் தொடர்ந்து சொல்லி வந்தது.
நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், இந்த புயல் தீவிர புயலாக வருவதன் காரணமாக 110 கிலோமீட்டர் வரையில் காற்று வீசும் என்று எச்சரித்தார். சில இடங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்றார்.

இந்த நிலையில்தான் 111 கிலோ மீட்டர் வேகத்தில் உச்சபட்ச காற்று வேகம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காரைக்காலில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது கண்டறியப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால்தான் மின் கம்பங்கள், மரங்கள் அதிக அளவில் சாய்ந்து சேதம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வர்தா புயலுடன் ஒப்பிட்டால் இந்த காற்றின் வேகம் குறைவு தான். வர்தா புயல் சென்னையைத் தாக்கியபோது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications