தேர்தல் இருக்கட்டும்.. அதற்கு முன்பே கேமில் வென்ற திமுக.. ஸ்டன் ஆகி நிற்கும் அதிமுக, தவெக.. பின்னணி
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) களத்தில் மற்ற கட்சிகளை விட பல படிகள் முன்னிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஒரு வலுவான அரசியல் பிம்பத்தை (Perception) உருவாக்குவதில் திமுக வெற்றி கண்டுள்ளது. அரசியல் வெற்றியை விட அரசியல் பிம்பத்தை உருவாக்குவது முக்கியம்.. அந்த கேமில் திமுக வென்றுவிட்டது!

கூட்டணி பலம்: வியூகத்தில் வீழ்த்திய ஸ்டாலின்
திமுகவின் மிகப்பெரிய பலமாக அதன் கூட்டணிக் கட்டமைப்பு பார்க்கப்படுகிறது. சமீபத்திய நகர்வுகள் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளார்:
தேமுதிக வருகை: நீண்ட இழுபறிக்குப் பிறகு, கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இது அந்தப் கூட்டணியில் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, வட மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் இணக்கம்: அதிகாரப் பகிர்வு மற்றும் தொகுதிப் பங்கீட்டில் சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும், டெல்லி மேலிடத்துடன் பேசி காங்கிரஸ் உடனான சிக்கல்கள் சுமூகமாக முடிக்கப்பட்டுள்ளன. இதனால் 'இந்தியா' கூட்டணி தமிழகத்தில் சிதறாமல் நீடிக்கிறது. தற்போது மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களே ஸ்டாலினை புகழ்ந்து பேச தொடங்கி உள்ளன.
எதிர்க்கட்சிகளின் நிலை: பேப்பரில் பலம், களத்தில் பலவீனம்?
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) புள்ளிவிவரப்படி பலமாகத் தெரிந்தாலும், களப்பணிகளில் இன்னும் வேகம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற உள்விவகாரங்களில் அவர்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில், திமுக ஒரு படி மேலே சென்றுவிட்டது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. சமூக வலைதளங்களில் பெரிய ஆதரவு இருந்தாலும், கிராமப்புறங்களில் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் 'கிரவுண்ட் ஒர்க்' இன்னும் தொடங்கப்படவில்லை என்பது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்சிக்கு எதிரான அலை எங்கே?
பொதுவாக ஆளும் கட்சி மீது இருக்கும் 'எதிர்ப்பு அலை' (Anti-incumbency) இந்த முறை பெரிய அளவில் தென்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்ற நேரடிப் பயன் தரும் திட்டங்கள் மூலம் மக்களிடம் நற்பெயரைத் தக்கவைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சட்ட ஒழுங்கு தவிர மற்ற விஷயங்கள் பெரிதாக களத்தில் பேசப்படவில்லை.
தொடர் களப்பணிகள்
திமுகவின் தேர்தல் இயந்திரம் ஏற்கனவே முழுவீச்சில் இயங்கத் தொடங்கிவிட்டது. வெறும் பொதுக்கூட்டங்களாக இல்லாமல், பிரிவாரியாக கூட்டங்களை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்:
மகளிர் அணி மாநாடுகள்: பெண்களின் வாக்கு வங்கிக்கு முக்கியத்துவம் அளித்தல்.
இளைஞர் அணி பாசறை: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர்களை ஒருங்கிணைத்தல்.
பூத் கமிட்டி கூட்டங்கள்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தனித்தனியாக குழுக்களை அமைத்து களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் இன்னும் வியூகம் வகுப்பதிலேயே காலத்தைக் கடத்த, திமுக ஏற்கனவே களத்திற்குச் சென்றுவிட்டது. இந்தத் தீவிரமான களப்பணியும், வலுவான கூட்டணியும் 2026 தேர்தலில் திமுகவிற்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
-
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications