சென்னையில் இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் கொரோனா மரணம் கிடுகிடு உயர்வு
சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 42 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக ராணிப்பேட்டையில் 12 பேரும், சேலத்தில் 10 பேரும் பலியாகி உள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 113 பேர் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 42 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 14,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்த்தில் புதிய உச்சமாக நேற்று 18692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1166756 ஆக உயர்ந்தத. இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று காலைநிலவரப்படி தமிழகத்தில் 115128 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராணிப்பேட்டை
மொத்தம் உள்ள 37 மாநிலங்களில் 35 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 100க்கும் மேல் உள்ளது. நேற்று 27 மாவட்டங்களில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. சென்னைக்க அடுத்தபடியாக ராணிப்பேட்டையில் 12 பேரும், சேலத்தில் 10 பேரும் பலியாகி உள்ளனர்.

செங்கல்பட்டு கோவை
சென்னை தான் தமிழகத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 5473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் நேற்று 31222 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கோவையில் 1113 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

எங்கு அதிகம்
சென்னைக்குப் பிறகு, செங்கல்பட்டு (8,087), திருவள்ளூர் (5,564), கோயம்புத்தூர் (6,943), மதுரை (4,207) மற்றும் காஞ்சிபுரம் (3,008) ஆகிய இடங்களில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் உள்ளனர். சென்னையும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பேட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து 8,038 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இப்போது 47,881 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளில் கிட்டத்தட்ட 41% ஆகும்,

மேற்கு மாவட்டங்கள்
மீதமுள்ள வடக்கு மாவட்டங்களில் 1,886 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். . சென்னை உட்பட மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் 59,845 பேர் இப்போது தொற்றுநோய்க்காக சிகிச்சை பெறுகிறார்கள். மேற்கு மாவட்டங்களிலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications