அமித்ஷா வருகையால் தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்.... பாஜகவினர் ட்வீட் !! #TNwelcomesAmitshah

தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர். எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே என்று பதிவிட்டு #TNwelcomesAmitshah என்ற ஹாஷ்டேக் பதிவிட்டுள்ளார் தமிழக பாஜக பொறுப்பாளர் சி டி ரவி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமித்ஷாவின் வருகையால் தமிழ்நாட்டின் விதிமாறும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிடி ரவி, எதிரிகள் அவர்தம் படை புகுந்து நைய புடைய எம்தலைவன் வருகிறார். தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர் என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் சாணக்கியர் என்று பாஜகவினரால் வர்ணிக்கப்படும் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு ட்விட்டரில் வெல்கம் சாணக்யா, வெல்கம் அமித்ஷா என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #TNwelcomeschanakya ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி இந்தியளவில் 2ஆ இடத்தில் உள்ளது.

தனது வருகையை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்ப்போர் விலகுவீரே

எதிர்ப்போர் விலகுவீரே

அமித்ஷாவின் வருகையால் தமிழ்நாட்டின் விதிமாறும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிடி ரவி, எதிரிகள் அவர்தம் படை புகுந்து நைய புடைய எம்தலைவன் வருகிறார். தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர். எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே என்று பதிவிட்டு #TNwelcomesAmitshah என்ற ஹாஷ்டேக் பதிவிட்டுள்ளார்.

வளர்ச்சிப்பாதை

வளர்ச்சிப்பாதை

சாணக்கியாவை வரவேற்க தமிழ் மக்கள் காத்திருக்கிறோம் என்று என்று பதிவிட்டுள்ளார். தமிழகம் அரவணைக்க தயாராக உள்ளது. தமிழகம் செழிப்படையும் என்றும் பதிவிட்டுள்ளார் சி.டி ரவி.

கிலி வரப்போகுது

கிலி வரப்போகுது

சிங்கத்தின் வருகை கழுதைப்புலிகளுக்கு கிலியை ஏற்படுத்தி விட்டது என்று பதிவிட்டிருக்கிறார் ஒருவர்

அமித்ஷாவிற்கு வரவேற்பு

அமித்ஷாவிற்கு வரவேற்பு

சக்திவாய்ந்த உள்துறை அமைச்சர் சாணக்கியர் அமித்ஷாவை வரவேற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

சிங்கம் சிங்கிள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+