ஸ்லோ மோஷன் மட்டும் இல்லையென்றால்.. ரஜினிகாந்த் நல்ல நடிகரா? ராம் கோபால் வர்மா சொன்ன அந்த பதில்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நல்ல நடிகரா என்று கேட்டால், தனக்கு தெரியவில்லை என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே விவாதமாகி வருகிறது. ஸ்லோ மோஷன் இல்லாமல் ரஜினிகாந்த் இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை என்று கூறிய அவர், ரசிகர்கள் அவரை கடவுளாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஏர்போர்டில் கூலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நாள் முதலே, அவரின் நடிப்பு தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், ரஜினிகாந்தின் நடிப்பு திறமை குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசிய சம்பவம் மீண்டும் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நல்ல நடிகரா என்று கேட்டால், தனக்கு தெரியவில்லை என்று ராம் கோபால் வர்மா கூறி இருக்கிறார்.
1980, 90 களில் ராம் கோபால் வர்மாவின் படங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தன. ஷிவா, சத்யா, சர்கார், ரங்கீலா என்று ராம் கோபால் வர்மாவின் படங்கள் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டாகின. இதனால் தெலுங்கு சினிமாவின் முதல் பான் இந்தியா இயக்குநர் என்றால் அது ராம் கோபால் வர்மா மட்டும்தான். இதனால் ராம் கோபால் வர்மாவை அம்மாநில நடிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக அவரின் பேச்சுகள் சர்ச்சையாகி வந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் தொடர்பான பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது. யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில், சினிமாவில் நல்ல நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நடிப்பு என்பது கதாபாத்திரங்களை சார்ந்து இருக்கும். ஆனால் ஸ்டார்கள் அவர்களின் ஃபெர்ஃபாமன்ஸை சார்ந்து உள்ளார்கள்.
ரஜினிகாந்த் நல்ல நடிகரா என்று கேட்டால், எனக்கு தெரியவில்லை. சத்யா படத்தில் உள்ள பிக்கு மாத்ரே கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவரை ஸ்டாராக பார்க்கவே விரும்புகிறார்கள். ஸ்லோ மோஷன் இல்லாமல் ரஜினிகாந்த் இருந்திருக்க முடியுமா என்றும் தெரியவில்லை. பாதி படத்திற்கு ரஜினிகாந்த் எதுவும் செய்யாமல் நடந்து வருவதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அதில் எந்த தவறும் இல்லை. ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை கடவுளாக பார்க்கிறார்கள். அதனால் ரஜினிகாந்தால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. அவரால் ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தில் 45 நிமிடங்களுக்கு மேலாக ரஜினிகாந்த் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications