நடிகை சித்ரா மரணம் தற்கொலையும் அல்ல.. கொலையும் அல்ல.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையும் அல்ல, கொலையும் அல்ல என பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ என்பவர் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி கலந்து கொண்டார்.
அவர் சூட்டிங் செல்ல வசதியாக நசரத்பேட்டையில் உள்ள பிளசண்ட் டேஸ் என்ற ஹோட்டலில் கணவர் ஹேமந்துடன் தங்கியிருந்தார். அவர் கடந்த 9-ஆம் தேதி 2.30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை
இந்த நிலையில் அவரது மரணம் கொலை என சித்ராவின் தாய் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது உறுதியானது. அது போல் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பெண் ஜோதிடர்
இந்த விசாரணையில் சித்ராவுடன் நடித்த நடிகர், நடிகைகள், அக்கம்பக்கத்தார், நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகம் என்ற பெயரில் கணவர் கொடுத்த மன உளைச்சல் காரணமாக சித்ரா உயிரிழந்துவிட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது இறப்பு குறித்து ஒரு பெண் ஜோதிடர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

திறமை
பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறுகையில் சித்ரா மே மாதம் 2-ஆம் தேதி 1992-ஆம் ஆண்டு பிறந்தார். அவரது ஜாதக கணிப்பின்படி அவர் மாலை 5.15 மணிக்கு பிறந்துள்ளார். அவர் இயல்பிலேயே திறமையானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்திருப்பார். இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை ஹேமந்த் அபகரிக்க திட்டமிடுவதாக சித்ராவின் தாய் குற்றம்சாட்டியிருந்தார்.

தற்கொலை
சித்ராவின் மரணம் தற்கொலையும் அல்ல கொலையும் அல்ல என்கிறார் பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன். இந்த வீடு தொடர்பாக கணவரை எப்படியாவது பயமுறுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தூக்கில் தொங்குவது போல் முடிவு செய்திருக்கிறார். ஆனால் விளையாட்டு விபரீதமாக முடிந்துவிட்டது.

கணவரை பயமுறுத்த
எனவே அவர் விளையாட்டாக கணவரை பயமுறுத்த செய்ததே இது போன்று உயிரை பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு கணவர் ஹேமந்த் காரணமாக இருக்க முடியாது என கூறியுள்ளார். இது போன்று பல்வேறு தரப்பினர் அளித்து வரும் காரணங்களால் அனைவரும் குழம்பி போய் உள்ளார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications