சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நள்ளிரவில் அத்துமீறிய இளைஞர்.. அஜித் ரசிகையான பெண் பைக் ரேஸர் பரபரப்பு புகார்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: அஜித் ரசிகையும் பெண் பைக் ரேஸருமான நிவேதா ஜெசிகாவை இளைஞர் ஒருவர் வழி மறித்து அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகவும் தனது செல்போனை பறிக்க முயன்றதாகவும் ஆதம்பாக்கம் போலீஸிஸ் புகார் அளித்துள்ளார்.

நிவேதா ஜெஸிகா அஜித் ரசிகை என்பதால் அவரை போல் பைக் ரேஸர் ஆக வேண்டும் என்ற கனவில் பைக் ரேஸை கற்றுக் கொண்டார். இவர் இதுவரை பல்வேறு போட்டிகளில் வென்றுள்ளார்.

இவர் இரு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் நிவேதா தன்னிடம் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக புகார் அளித்துள்ளார்.

ஒரே நாளில் முடிஞ்சு போச்சு.. அவள் உடலை எரித்தபோதும் யாருமே பக்கத்தில் இல்லை.. துடித்து இறந்த ஜெஸிகா!ஒரே நாளில் முடிஞ்சு போச்சு.. அவள் உடலை எரித்தபோதும் யாருமே பக்கத்தில் இல்லை.. துடித்து இறந்த ஜெஸிகா!

நிவேதா ஜெசிகா

நிவேதா ஜெசிகா

இதுகுறித்து தனது ட்விட்டர் பககத்தில் நிவேதா ஜெசிஸா கூறுகையில், சென்னை அண்ணாநகரிலிருந்து எனது பணியை முடித்துக் கொண்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அசோக் பில்லர் அருகே ஒரு இளைஞர் என்னை வழிமறித்தார். அவர் வெள்ளை நிற சர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். அவர் வைத்திருந்தது பல்சர் பைக். ஒல்லியாக இருந்தது போல் ஞாபகம்.

வண்டியை நிறுத்தினேன்

வண்டியை நிறுத்தினேன்

அவர் என்னை பின்தொடர்ந்து வந்ததால் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே எனது வாகனத்தை நிறுத்திவிட்டு என் வீட்டுக்கு போன் செய்தேன். உடனே அந்த நபர் அங்கிருந்து சென்றார். நானும் அவர் சென்றுவிட்டார் என நினைத்து எனது வண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். ஆனால் அந்த நபர் என்னை மீண்டும் பின்தொடர்ந்தார்.

திருமண மண்டபம்

திருமண மண்டபம்

சரியாக நள்ளிரவு 12.41 மணிக்கு ஒரு திருமண மண்டபத்தை நான் கிராஸ் செய்த போது எனது போனை பறிப்பதற்கும் என்னிடம் அத்துமீறல் செய்யவும் முயற்சித்தார். இதனால் எனது பைக் நிலைத்தடுமாறி ஒரு கருப்பு நிற மாடு மீது மோதியது. அப்போது எனது போன் கீழே விழுந்தது.

எமர்ஜென்சி அழைப்பு

எமர்ஜென்சி அழைப்பு

உடனே என்னிடம் வந்து நான் இதை செய்யத்தான் வந்தேன் என கூறிவிட்டு தப்பினார். நான் அவரை இரு சக்கர வாகனத்தில் பிடிக்க முற்பட்டேன். ஆனால் அவர் தப்பிவிட்டார். உடனே எனது போனிலிருந்து எஸ்ஓஎஸ் எமர்ஜென்சிக்கு அழைத்தேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் நேராக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் என கூறி. நான் கூறிய சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே 3 சிசிடிவிக்கள் இருக்கின்றன. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது ட்வீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Woman Bike Racer Nivetha Jessica raised complaint about youth who threatened her at last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X