தலைச்சான் பிள்ளையின் கருவைக் கடித்து.. துண்டோடு நின்ற லட்சுமி! வீடு முழுக்க பணம்.. 15 லட்சம் அபேஸ்!
சென்னை: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக லட்சுமி என்பவர் மீது புகார் எழுந்து இருக்கிறது. தன் கையில் இருப்பது தலைச்சான் பிள்ளையின் கரு என்றும், அதனை வாயில் கடித்து பூஜை செய்தால் பணம் குட்டி போடும் என தந்தை மகனை ஏமாற்றி லட்சக்கணக்கில் சுருட்டி இருக்கிறார் இந்த பெண். தேனி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போது பிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கின்றனர் ஏமாற்றப்பட்ட தந்தையும் மகனும்.
இதெல்லாம் நம்பியார் காலத்துக்கு டெக்னிக் என சொன்னாலும் இன்றும் மோசடிகளில் சிக்கி தங்களது பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. வீட்டில் புதையல் இருப்பதாக மோசடி, பில்லி சூனியம் இருப்பதாக மோசடி, பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி தொடர்கிறது.
பணத்தாசை காட்டி கலர் கலராக ரீல் விட்டு காசை கறப்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என எவ்வளவு சொன்னாலும் மக்கள் ஏமாந்து தான் வருகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் திருவாரூரில் அரங்கேறி இருக்கிறது.

தேனியைச் சேர்ந்த பெண் சாமியார் ஒருவரிடம் சிக்கி தங்கள் பணத்தை இழந்து இருக்கிறார்கள் தந்தையும் மகனும். ஆயிரம் ஐநூறு அல்ல கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாயயை. தேனியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் சாமியார் தனது வீட்டில் மாந்திரீக பூஜை செய்து வருவதாக கூறி பலரிடம் பணத்தை ஏமாற்றி பறித்திருக்கிறார். தனது ஆட்களை வைத்து தனது பராக்கிரமங்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டிருக்கிறார்.
பெண் சாமியாரை பார்த்து பூஜை செய்ததும் லட்சம் லட்சமாய் பணம் வந்தது, வீட்டில் புதையல் கிடைத்தது, என இஷ்டத்துக்கு அளந்து விட இதனை கேள்விப்பட்ட திருவாரூரை சேர்ந்த தந்தையின் மகனும் தேடி வந்திருக்கின்றனர். லட்சுமியை சந்தித்து தங்களுக்கு பணத்தை இரட்டிப்பாக்கித் தர வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து லட்சுமி, தலைச்சான் பிள்ளையின் கரு என கூறி மாமிசம் போன்ற ஒன்றை தனது வாயில் கடித்திருக்கிறார்.
தொடர்ந்து துண்டை கட்டிக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று பூஜை செய்வதாக கூறி இருக்கிறார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் சென்றபோது அங்கு கட்டு கட்டாக பணம் இருந்தது. இதில் ஒரு கோடிக்கு மேல் பணம் இருக்கிறது. நீங்கள் 30 லட்சம் கொடுத்தால் இதனை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எலுமிச்சம்பழம் ஒன்றைத் தருகிறேன். அது உருண்டு போகும்போதுதான் இந்த பணத்தை நீங்கள் எடுக்க வர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் அந்த பழத்துக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் எனவும் அதற்கு முன்னதாக தனக்கு முப்பது லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை நம்பிய தந்தையும் மகனும் ஊருக்கு அதனை எடுத்துச் சென்று பூஜை செய்து இருக்கின்றனர். மேலும் லட்சுமி கேட்டபோதெல்லாம் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய்க்கு மேலாக பணத்தை கொடுத்து இருக்கின்றனர்.
நாட்கள் செல்ல செல்ல பணத்தைக் கேட்டும், லட்சுமி தராததால் அவர்கள் நேரடியாக சென்று கேட்டுள்ளனர். அப்போது அடியாட்களை வைத்து அவர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து தந்தையும் மகனும் தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதனை கேள்விப்பட்ட லட்சுமி சில அடியாட்களை வைத்து அவர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பலமுறை லட்சுமியிடம் பணத்தை கேட்டுள்ளன. ஆனாலும் பணம் கிடைத்தபாடிவில்லை. இந்த நிலையில் தங்கள் மோசடி செய்யப்பட்டது குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர் தந்தை மகனும். தங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார். தலைச்சான் பிள்ளையின் கருவை கடித்தால் ஒரு கோடி கிடைக்கும் என ஏமாற்றிய பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications