ஜெயலலிதாவை திட்டிய எம்ஜிஆர் ஆத்மா! விஜய்க்கு ரகசிய தகவல்கள்! ஆவியிடம் பேசியதாக சென்னை பெண் பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி தன்னிடம் பேசியதாக பெண் ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார். மேலும் விஜய்யிடம் சொல்லுமாறு ஜெயலலிதா ஒரு சாணக்கியத்தனத்தை சொல்லி அனுப்பியதாகவும் இதற்காக விஜய்யை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அமைந்தகரையை சேர்ந்த ரீனா பிரதிலா என்ற பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி என்னிடம் இரு ஆண்டுகளாக பேசி வருகிறது. என்னிடம் நிறைய விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் இறப்பு குறித்த தகவல்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

vijay jayalalitha

நான் "இதெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள், என்னிடம் சொல்லி என்ன ஆக போகிறது" என கேட்டதற்கு, ஜெயலலிதா, "உன்னால் நிச்சயம் முடியும். நீ என் அண்ணன் மகள் தீபாவை போய் பார்" என கூறியிருந்தார். அவர் எப்படி இறந்தார் என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் கூற தயாராக இருக்கிறேன்.

பொய் இல்லை

நான் எதையும் பொய் சொல்லவில்லை. சிறு வயது முதலேயே ஆன்மாக்கள் என் கண்ணுக்கு தெரிவார்கள். அது போல்தான் ஜெயலலிதாவின் ஆவியும் என் கண்ணுக்கு தெரிந்தது. முதலில் என்னிடம் பேசிய ஜெயலலிதா, "நான் யாருக்காவது சாபமிட்டால் அவர்களின் வம்சமே அழிந்து போகுமாம். அந்த சாபத்திற்காக என்னை சிலர் யூஸ் செய்ய என்னிடம் வந்தார்கள்" என்ற விஷயத்தை ஜெயலலிதா என்னிடம் முதலில் கூறினார்.

ஜெயலலிதா ஆவி

ஜெயலலிதா ஆவி மேலும் கூறுகையில் "உன்னிடம் ஒரு சக்தி இருக்கிறது, கீதாவுக்கும் (ஜெயலலிதாவின் தோழி- நிறைய சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்) ஒரு சக்தி இருக்கிறது" என கூறிய ஜெயலலிதா ஆவி, இன்னும் 9 அல்லது 10 பேருக்கு சக்தி கொடுத்து வரவழைப்பாராம்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸையும் நேரில் போய் சந்திக்குமாறு ஜெயலலிதா ஆவி சொன்னது. கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் ஒரு சதி நடக்கிறது என்பதை அந்த சம்பவம் நடக்கும் முன் நாள் என்னிடம் அவருடைய ஆவி சொன்னது. இதை விஜய்யிடம் சொல்லி அவரை அலர்ட் செய்ய சொன்னது.

ஜெயலலிதாவை திட்டிய எம்ஜிஆர்

அது போல் ஜெயலலிதாவை எம்ஜிஆர் திட்டியதாகவும் என்னிடம் சொன்னார். அதாவது "கட்சியை முட்டாள்கள் கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கியே அம்மு. இது நியாயமா, நான் உன்னை நம்பித்தானே கட்சியை கொடுத்தேன். என் மனைவி ஜானகியிடம் இருந்து வாங்கிக் கொடுத்தேன். உனக்கு பொது அறிவு தெரியும் என்பதால்தானே கட்சியை நடத்துமாறு கொடுத்தேன். இந்த முறை விஜய்தான் முதல்வராக வருவார் என ஜெயலலிதா ஆவி என்னிடம் சொன்னது. அது போல் ஓபிஎஸ்ஸுக்கு அந்த ஆவி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் ஜெயலலிதா ஆவியின் ஆதரவு இல்லை.

விஜய்யிடம் தூது

விஜய் கிட்ட ஜெயலலிதா சில விஷயங்களை ஷேர் செய்ய சொல்லியிருக்கிறார். அதற்காக நான் அவரை பார்க்க வந்துள்ளேன். அதாவது கட்சியோட சூட்சுமத்தை சொல்ல சொல்லியிருக்கிறார். விஜய் இதன் பிறகு எந்த மாதிரியான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்பதை என்னிடம் அநத் ஆவி சொல்லியிருக்கிறது. அதை விஜய்யிடம் சொல்லிவிட்டுதான் ஆவி என்ன சொன்னது என்பதை மீடியாவில் சொல்வேன்.

கீதாவின் எண்

எனக்கு ஜெயலலிதா அம்மாவின் ஆவி ஒரு குரல் போல் வந்து பேசியது. அப்போது எனக்கு ஆழ்வார்பேட்டையில் ஒரு முகவரியை கொடுத்து அங்கு போய் பார்க்க சொன்னது. நானும் என் கணவரும் போய் பார்த்தோம். ஆனால் அங்கு அந்த ஆவி சொன்னது போல் யாரும் இல்லை. எங்களை அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.

ஜெயலலிதாவின் ஆவி

பிறகு என்னிடம் ஒரு போன் நம்பரை கொடுத்த ஜெயலலிதா ஆவி, "இது என் தோழி கீதாவின் போன் நம்பர். இதில் தொடர்பு கொள்" என்றார். ஆனால் நானோ, "நீங்கள் சொன்ன முகவரிக்கு போய் அசிங்கப்பட்டு வந்தோம். அதனால் போன் நம்பர் எல்லாம் வேண்டாம்" என்றேன். அதற்கு அவர் என்னை கட்டாயப்படுத்தி அந்த எண்ணுக்கு போன் செய்ய வைத்தார். நானும் போன் செய்தால் ஆண் பேசினார், கீதா என்றால் பெண் ஆச்சே, என்ன இது ஆண் பேசுகிறார் என யோசித்தேன். அப்புறம் விசாரித்ததில் அவர் கீதா அம்மாவின் மேனேஜர் என்றார். என்னிடம் 3 நாட்கள் பேசிவிட்டு பிறகுதான் கீதா அம்மாவிடம் போனை கொடுத்தார்.

தீபாவிடம் போன ஜெ. இல்லம்

கீதா ஒரு முகவரி கொடுத்தார். அங்கு போய் அவரை பார்த்த போது, கீதாவிடமும் ஜெயலலிதா ஆவி என்ன பேசியதோ அதைத்தான் என்னிடமும் பேசியது. போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், தீபாவிடம் சென்றது ஜெயலலிதாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தலைவா படத்திற்கு தடை விதித்தது சசிகலாதானாம். ஏன் என்றால், விஜய்யின் தந்தை, அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதாக கூறிவிட்டு ஒரு சில இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தாராம்.

தலைவா படத்திற்கு தடை விதிக்க சொன்ன சசி

இதை சசிகலா, ஜெயலலிதாவிடம் சொல்லி விஜய் மீது கோபத்தை மூட்டினாராம். அதனால்தான் தலைவா படத்திற்கு தடை விதிக்குமாறு சொன்னாராம். இவ்வாறு ஜெயலலிதாவின் ஆவி என்னிடம் பேசியது என ரீனா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+