சீச்சீ.. ஏபிவிபி சுப்பையா சண்முகமா இப்படி.. பெண்ணிடம் அநாகரீகம்.. 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!
டாக்டர் சுப்பையா சண்முகம் மீது பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
சென்னை: சீசீசீசீ... சுப்பையாவா இப்படி செய்தார் என தெரியவில்லை... ஏபிவிபி தலைவரான சுப்பையா சண்முகம், ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்துவிட்டாராம்.. இது சம்பந்தமாக அப்பெண் போலீசில் புகார் தரவும், ஏபிவிபி தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம்.. இவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் துறைத் தலைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது.. அங்குள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். அந்த அப்பார்ட்மென்ட்டில் பெண் ஒருவரும் குடியிருந்து வருகிறார்.. அவருக்கு 62 வயதாகிறது.

வண்டி
இந்த பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் சுப்பையா தனது வண்டியை நிறுத்திட்டுமா என்று அனுமதி கேட்டுள்ளார்.. அதற்கு அந்த பெண், வண்டியை நிறுத்தி கொள்ள, வாடகையை மாசமாசம் தர வேண்டும் என்று சொல்லி உள்ளார். இதில்தான் 2 பேருக்கும் தகராறு வெடித்துள்ளது. அடிக்கடி இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

புகார்
இந்நிலையில், அந்த பெண் ஆதம்பாக்கம் போலீசில் ஒரு புகாரை அளித்துள்ளார்.. அதில், "தன் வீட்டு வாசலில் சுப்பையா சிறுநீர் கழித்துவிட்டதாகவும், ஆபரேஷனுக்கு யூஸ் பண்ணின மாஸ்க் உட்பட பல குப்பைகளை வீட்டு வாசப்படியில் வீசிவிட்டு சென்றதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார். மேலும் இது சம்பந்தமான சிசிடிவி பதிவுகளையும் அதனுடன் இணைத்து புகார் தந்தார்.

மருமகன்
இந்த சிசிடிவி காட்சி சோஷியல் மீடியாவிலும் வெளியாகி உள்ளது.. இதை வெளியிட்டவர் அந்த பெண்ணின் மருமகன் பாலாஜி விஜயராகவன்.. இவர் ஒரு ஸ்டாண்டப் காமெடியன்.. தன்னுடைய மாமியாருக்கு இதுவரை எந்த நீதியும் இதுவரை கிடைக்கவில்லை என்று அந்த வீடியோவை வெளியிட்டு கருத்தும் பதிவிட்டிருந்தார். அதேபோல, புகார் தந்தும் சுப்பையா மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை... வீடியோ பதிவுகளை கொடுத்தும் போலீசார் விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று சம்பந்தப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டியிருந்தார்.
Recommended Video

விசாரணை
ஆனால் இந்த குற்றச்சாட்டை சுப்பையா உடனடியாக மறுத்திருந்தார். "என் மீது அபாண்டமாக புகார் தரப்பட்டுள்ளது.. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்... சிசிடிவி காட்சிகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், அப்பெண் அளித்த புகாரின அடிப்படையில், ஏபிவிபி தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இனி துரித விசாரணையும் ஆரம்பமாகும் என தெரிகிறது. பாஜக மாணவரணி தலைவர் மீது இப்படி ஒரு புகார் எழுந்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications