தவெக கூட்டத்தில் தாலியை கழற்றிய பெண் ஐடி ஊழியர்! ஷாக்கான ராஜ்மோகன்! யார் அவர்?
சென்னை: சென்னையை அடுத்த திருநின்றவூரில் நடந்த தவெக பொதுக் கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென வந்த ஒரு பெண் தாலியை கழற்றி கூச்சல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் அணி பொதுக் கூட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ராஜ்மோகன் பேசிக் கொண்டிருந்தார். "மக்கள் விரோத திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்" என்றார்.

அப்போது திடீரென மேடைக்கு வந்த ஒரு பெண் தாலியை கழற்றினார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அவர் மைக்கை பிடித்துக் கொண்டு, "நான் ஐடி ஊழியர், gold medallist, எனக்கு நீதி வேண்டும். என் குடும்பத்தினருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை, கணவருடன் வாழ பிடிக்கவில்லை.
நான் என்ன பைத்தியமா! கொரோனா காலத்தில் இரவெல்லாம் வேலை பார்த்து கொடுத்தேனே நான் என்ன பைத்தியமா, எனக்கு பாதுகாப்பு இல்லை, நான் அம்பத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து தப்பி வந்துள்ளேன்" என கூறினார்.
அப்போது அவரை பெண் காவலர்கள் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வெளியேற்றப்பட்டதும் ராஜ்மோகன் தனது பேச்சை தொடர்ந்தார். எனினும் தாலியை கழற்றிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜ்மோகனும் அதிர்ச்சி அடைந்தார்.












Click it and Unblock the Notifications