ஒரே வெட்டு.. என்னா ஒரு வெறித்தனம்.. பரமக்குடியை அதிர வைத்த வனிதா.. ஸ்டாலினுக்காக!
முக ஸ்டாலினுக்காக நாக்கை காணிக்கையாக தந்த பெண்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதை ஒட்டி, பெண் தொண்டர் ஒருவர் கோயிலுக்கு சென்று நாக்கை துண்டித்து காணிக்கையாக செலுத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கூட்டி வருகிறது.. கடவுள் மறுப்புக் கொள்கை பேசும் திமுகவில் இப்படி ஒரு அதிதீவீரமான வேண்டுதலா என்ற ஆச்சரியமும் சேர்ந்து எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட 10 வருடம் ஆட்சியை இழந்துள்ளது திமுக.. நியாயப்படி பார்த்தால், இந்த 10 வருடமும் திமுகவேதான் ஆட்சி செய்திருக்க வேண்டும்.. நூலிழையில் தவற விட்ட வாய்ப்பை, போராடி தற்போது பெற்றுள்ளது.
இதனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஏக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.. ஸ்டாலின் மேற்கொண்ட செயல்பாடுகள், மற்றும் அயராது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதை ஒட்டி, பெண் தொண்டர் ஒருவர் கோவிலுக்கு நாக்கை துண்டித்து காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள், நேற்று மதியமே ஸ்வீட்களை பரிமாறி கொண்டாடி மகிழ தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில், ஒரு தொண்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்..

கார்த்திக்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பொதுவக்குடியை சேர்ந்தவர் கார்த்திக்... இவர் தீவிரமான திமுக தொண்டர். இவரது மனைவி பெயர் வனிதா... சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வராக வர வேண்டுமென அங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் வேண்டி கொண்டாராம் வனிதா.

காணிக்கை
அப்படி ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டால், தன்னுடைய நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாகவும் வேண்டி கொண்டுள்ளார். இப்போது திமுகவுக்கு அபார வெற்றி கிடைத்து, ஸ்டாலினும் வரும் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்க உள்ளதால், வனிதா முத்தாலம்மன் கோயிலுக்கு சென்று தன்னுடைய நாக்கை அறுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி உள்ளார்..

சிகிச்சை
நாக்கை அறுத்ததுமே வனிதாவுக்கு ரத்தம் பொலபொலவென கொட்டியது.. இதையடுத்து, அவர் உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்... அங்கு இப்போது வனிதாவுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. தேர்தல் நேர்த்தி கடனுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பரமக்குடியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடவுள் மறுப்பு
இந்த விவகாரத்தை சிலர் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டனர்.. கடவுள் மறுப்பு பேசும் கட்சியில் இப்படி நடக்கிறதே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.. ஆனால், திமுகவின் கொள்கை, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது தான் என்றும், திமுகவின் கொள்கைக்கும், ஒருவரின் தனிப்பட்ட வேண்டுதல்களுக்கும் சம்பந்தமே கிடையாது, இது அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications