"மாதம் ரூ.1.7 லட்சம் சம்பளம்.." ஆனாலும் செலவுகளை சமாளிக்க முடியவில்லையாம்.. புலம்பி தள்ளும் இளம்பெண்
சென்னை: பெண் ஒருவர் மாதம் ரூ.1.7 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். ஆனாலும், தன்னால் எந்தவொரு செலவையும் செய்ய முடியவில்லை என்றும் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பது போல உணர்வதாகச் சொல்லியிருக்கிறார். மேலும் தனக்காக ஒரு பொருளை வாங்கும்போது கூட குற்ற உணர்ச்சி ஏற்படுவதாக இணையத்தில் புலம்பித் தள்ளி இருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் பலரும் கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். ஆனாலும், கூட சம்பளம் போதவில்லை என அவர்கள் சொல்வகை நாம் பார்த்திருப்போம். குறிப்பாகப் பெருநகரங்களில் வாழ்வோர் எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றவில்லை என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

ரூ.1.7 லட்சம் சம்பளம்
அப்படிப் பெண் ஒருவர் பதிவிட்டுள்ள போஸ்ட் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 27 வயதான அந்தப் பெண்ணுக்கு மாதம் ரூ.1.7 லட்சம் சம்பளம் வருகிறதாம். இருந்தாலும் கூட அந்தத் தொகை பத்தவில்லை என்றும் தான் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் அந்தப் பெண் ரெடிட் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுவே இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அந்தப் பெண் தனது பதிவில், "மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்தும் நான் பெரும் சுமையாக உணர்கிறேன். சிப் முதலீடுகள், மாதச் செலவுகள் மற்றும் கல்விக் கடன் தவணைகளை எல்லாம் கட்டிய பிறகு என்னிடம் எதுவும் மிஞ்சுவதில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வளவு செலவு இருப்பதால் தனக்காகக் கொஞ்சப் பணம் செலவு செய்தாலும் அதில் குற்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது பழைய போன் பழுதாகிவிட்டதால், புதிய போன் வாங்க வேண்டியுள்ளதாகவும், ஆனால் அதைக்கூட வாங்க முடியாமல் திணறுவதாகவும் கூறியிருந்தார்.
நண்பர்களைக் கூட சந்திக்க முடியல
அவர் மேலும் கூறுகையில் "என்னால் இப்போது செல்போனை வாங்க முடியாது. அப்படி வாங்கினால் நான் எனது சேமிப்பை ஏமாற்றுவது போல் உணர்கிறேன். ஏதாவது தவறு நடந்தால் என்ன செய்வது என்று பயமாக இருக்கிறது. கூடுதல் பணம் செலவழித்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதற்காகவே நண்பர்களுடன் வெளியில் செல்வதையும், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதையும் கூட தவிர்க்கிறேன். அப்படியே வேறு வழியில்லாமல் உணவு ஆர்டர் செய்ய வேண்டி வந்தாலும் ₹200-க்குள் மலிவான ஒன்றையே தேர்வு செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.
செலவுகள்
அவரது வருமானத்தில் கணிசமான பகுதியாக ₹30,000 கல்விக் கடன் இஎம்ஐ-க்காக போய்விடுகிறதாம். ₹50,000 முதல் ₹60,000 வரை பல்வேறு திட்டங்களில் சிப் முதலீடு செய்கிறார். வேலைக்குச் சென்று வர மாதந்தோறும் ₹20,000 செலவாகிறது. வீட்டு வேலை செய்பவருக்கு ₹5,000, தனிப்பட்ட தேவைகளுக்கு ₹5,000 செலவு ஆவதாக அவர் குறிப்பிடுகிறார். கூடுதலாக, கடந்த நான்கு மாதங்களாக, அம்மாவிடம் பெற்ற தொகையைத் திரும்பச் செலுத்த மாதம் ₹20,000 செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
நெட்டிசன்கள்
அவர் மேலும் தனது பதிவில், "நாள் முழுவதும் வேலை செய்த பிறகும் எனக்காகச் செலவழிக்க முடியாத இந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. நம்பிக்கையற்ற உணர்வு மெல்ல அதிகரித்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு நபர், "உங்களுக்காகச் செலவழிக்க முடியாவிட்டால் சம்பாதிப்பதில் என்ன பயன்? வாழ்க்கை ஒரு முறை தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. சமநிலைதான் இங்கே முக்கியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு நபர், "குற்ற உணர்வு இல்லாமல் உங்களுக்காகச் செலவழிக்க ₹10,000 முதல் ₹20,000 வரை ஒதுக்கி வையுங்கள். உங்கள் சம்பளம் ₹1.5 லட்சம் என்று நினைத்துக்கொண்டு மீதியைத் திட்டமிடுங்கள். உங்களுக்குக் கடன் இருந்தால், இஎம்ஐ தொகையைப் போல் 6 முதல் 10 மடங்கு அவசரக்கால நிதியாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று யோசனை வழங்கினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications