மாவு விற்ற மேரி.. சைடில் வட்டிக்கு கடன்.. பாதிக்கப்பட்ட 2 பெண்கள்.. கொன்று தீர்த்த கணவர்கள்!
வட்டிக்கு விட்ட பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
சென்னை: இட்லி மாவு விற்கும் அல்போன்ஸ்மேரி.. பணத்தை அநியாய வட்டிக்கு விட்டு சம்பாதித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவரவர் புருஷன்களிடம் சொல்லி, அல்போன்ஸ்மேரியை கொலையே செய்து விட்டார்கள்!
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்மேரி, 42 வயது. கல்யாணம் ஆன இவருக்கு குழந்தைகள் கிடையாது.
இவர் அதே பகுதியில் இட்லி மாவு வியாபாரம் செய்து வந்தார். அத்துடன், பலருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார்.

மேரியை காணோம்
கடந்த 15-ம் தேதி மீன் வாங்கிட்டு வரேன்னு மெரினா பீச்சுக்கு போன அல்போன்ஸ்மேரி, வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. இதனால் அவருடைய கணவன் இருதயநாதன், இது குறித்து ஐஸ் அவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் மனைவியை காணோம் என்று கூறி புகார் தந்தார். இந்நிலையில் மதுராந்தங்கம் அருகே கிணற்றில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் முழு விவரம் தெரியவந்துள்ளது.

வட்டி காசு
அல்போன்சாமேரியிடம் ராயபேட்டையை சேர்ந்த தேவி, வள்ளி ஆகியோர் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர். வட்டிப்பணம் நிறைய மாதங்கள் இருவரும் தந்துள்ளனர். சில சமயங்களில் வட்டி பணம் கட்ட முடியாமல் போனதால், கழுத்தில் கிடந்த நகைகளையும் விற்று வட்டியை அல்போன்சாமேரிக்கு தந்துள்ளனர்.

நெருக்கடி
ஒரு கட்டத்தில் இவர்களால் பணத்தை தர முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் அல்போன்சாமேரியை கொலை செய்வது என முடிவு செய்துள்ளனர். வட்டி பணம் கொடுப்பதாக கூறி ராயபேட்டையில் உள்ள தேவி வீட்டிற்கு அல்போன்ஸாவை வரவழைத்துள்ளனர்.

மதுராந்தகம் கிணறு
அங்கு வந்த மேரியை தலையில் இரும்பு கம்பியால் அடித்து தேவி, அவரது கணவர் மணி மற்றும் வள்ளி, சுரேஷ் ஆகியோர் கூட்டாக கொலை செய்துள்ளனர். பிறகு பிணத்தை எடுத்து ஒரு ஆட்டோவில் ஏற்றி, மதுராந்தகம் கொண்டு சென்று கிணற்றில் வீசியுள்ளனர்.

4 பேர் கைது
அப்போது, அல்போன்ஸா மேரி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து, அதை சேட்டு கடையில் அடமானம் வைத்து, அந்த பணத்தை இத்தனை நாள் செலவும் செய்துள்ளனர். இந்த விவரம் எல்லாம் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
-
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications