கோயம்பேட்டில் பயங்கரம்.. பெண் அதிகாரிக்கு கத்திக்குத்து... போதையில் இருந்த கணவரின் வெறிச்செயல்
மனைவியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை: சுங்கத் துறை பெண் துணை ஆணையரை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெண்கள் என்னதான் படித்து உயர் பதவியில் அமர்ந்தாலும் சமூகத்தில் அவர்கள் மதிப்பு ஏனோ சாதாரண கடை நிலைதான்...

ஆணாதிக்க சிந்தனை பல்வேறு வடிவங்களில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது... கூலி வேலை செய்யும் பெண் தொழிலாளிகள் ஆனாலும் சரி, சமூகத்தில் உயர்ந்த பணிகளில் இருக்கும் பெண்கள் ஆனாலும் சரி, இந்த அவல பரவி உள்ளது.
படித்த பட்டதாரி பெண்கள் என்றும் பாராமல், அவர்களுக்கும் "சுயமரியாதை" உள்ளது என்ற பொதுஅறிவு கூட இல்லாமல், உணர்வுகள் அனைவருக்குமே பொதுப்படையானது என்ற அடிப்படை புத்தி கூட இல்லாமல், தங்கள் காலில் போட்டு மிதிக்கும் ஆண்களின் மறைமுக மற்றும் நேரடி அராஜகங்கள் எல்லை மீறி கொண்டிருக்கின்றன..
அவ்வளவு ஏன், பெண்கள் அறிவாகவும் துணிவாகவும் திறமைசாலிகளாவும் இருப்பதை, சில ஆண்களால் கொஞ்சம்கூட ஜீரணிக்கவும் முடிவதில்லை... தாங்கி கொள்ளவும் முடிவதில்லை.. தங்கள் இயலாமையின் வெளிப்பாடுகளை பல ரூபங்களில் தாங்களே வெளிப்படுத்தியும் கொள்கிறார்கள்.. தங்கள் குணம் இதுதான் என்று அவர்களே வெளிச்சம் போட்டு காட்டியும் கொள்கிறார்கள்.. இதுதான் சமூக பேத வன்முறைகளுக்கு அடித்தளமாகிறது.
சாதாரண பட்டப்படிப்பை முடித்து வெளியேறுவதற்கே பெண்கள் போராடும் நிலை உள்ளது. அதிலும் ஐஆர்எஸ் எனும் அரசின் சிவில் தேர்வில் வென்று அதிகாரியாக அமர்ந்த பெண் ஒருவர் அவர் என்னதான் அதிகாரியாக இருந்தாலும் மனைவி என்கிற பார்வையில் கணவனால் தாக்கப்பட்ட சமபவம் சென்னையில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் வருமான வரித்துறையில் உயர் அந்தஸ்த்தில் உள்ளவரும் ஆவார்.. அவரை பற்றின செய்திதான் இது.
சென்னை கோயம்பேட்டில் கேம்ஸ் வில்லேஜில் விமான நிலையத்தில் சுங்கத் துறை துணை ஆணையர் சர்மிளா பணியாறறி வருகிறார்.. இவருக்கு 32 வயது.. ஐஆர்எஸ் தேர்ச்சி பெற்றவர். இவரது கணவர் செல்வமுத்துக்குமார்.. 36 வயதாகிறது. சிறுசேரியில் டிசிஎஸ் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்...
நேற்று இரவு இருவரும் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.. கணவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது... வீட்டின் அருகே வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர், காரில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியை தாக்கி உள்ளார்.. இதில், ஷர்மிளாவின் இரண்டு கை, கால், தொடை, மார்பு பகுதிகளில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டன.
படுகாயமடைந்த சுங்கத்துறை துணை ஆணையர் ஷர்மிளாவை, அங்கிருந்தோர் மீட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. மது போதையில் கணவர் செல்வ முத்துக்குமாரை கைதுசெய்துள்ள கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இந்த தம்பதிக்கு 6 மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.. மதுரையில் நடைபெறும் திருமணத்துக்கு செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கத்திக்குத்து நடந்ததாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications