சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போனதும் போன் பண்ணுங்கம்மா! சென்னை ஏர்போர்ட்டில் நைஜீரிய செஸ் வீராங்கனைக்கு முத்தமிட்ட மகளிர் போலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுவிட்டு கடைசி நபராக சென்னையிலிருந்து தாயகம் திரும்பும் நைஜீரிய வீராங்கனைக்கு பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர், முத்தமிட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் தாயகம் திரும்பியதும் தனக்கு மறக்காமல் போன் செய்யுமாறும் அந்த அதிகாரி சைகையில் காண்பித்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு அந்தந்த நாட்டை சேர்ந்த உணவு வகைகள் பரிமாறப்பட்ட போதிலும் இட்லி, சாம்பார், தோசை, சிக்கன் கிரேவி உள்ளிட்டவைகளை விரும்பி உண்டனர்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் ரேஸில் வேட்டிகட்டிய தமிழர்! வாய்ப்பை வசப்படுத்தும் முனைப்பில் ப.சிதம்பரம்! காங்கிரஸ் தேசியத் தலைவர் ரேஸில் வேட்டிகட்டிய தமிழர்! வாய்ப்பை வசப்படுத்தும் முனைப்பில் ப.சிதம்பரம்!

11 நாட்கள்

11 நாட்கள்

இவர்கள் மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 11 நாட்கள் இந்த போட்டி நடத்தப்பட்ட நலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மட்டும் ஓய்வு நாளாக இருந்தது. அன்றைய தினம் வெளிநாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்தனர்.

வீரர், வீராங்கனை

வீரர், வீராங்கனை

இந்த போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் அடுத்த முறையும் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்திலேயே நடைபெற வேண்டும் என விரும்பும் அளவுக்கு தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. வீரர், வீராங்கனைகள் தங்கியிருக்கும் இடங்களில் மருத்துவக் குழுவினர் அமைக்கப்பட்டு ஏதாவது அவசரம் என்றால் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வீரர், வீராங்கனைகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

இந்த நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்ட நைஜீரியா வீராங்கனை டோரிட் செமுவா ஒபோவனோவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை சீரான நிலையில் அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.

முத்தமிட்ட பெண் எஸ்ஐ

முத்தமிட்ட பெண் எஸ்ஐ

அவரை செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சுகுணா சிங் உள்ளிட்டோர் பூங்கொடுத்து கொடுத்து விமான நிலையத்தில் வழிஅனுப்பி வைத்தனர். அப்போது நைஜீரிய வீராங்கனையை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டு பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் தேவிகா தனது அன்பை வெளிப்படுத்தி வழியனுப்பி வைத்தார். இந்த அன்பில் நனைந்தபடி ஆனந்த கண்ணீருடன் நைஜீரியாவுக்கு சென்றார் டோரிட்! அப்போது ஊருக்கு போனதும் போன் பண்ணுமா என சைகை மூலம் டோரிட்டுக்கு பெண் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக போலீஸாருக்கு பாராட்டு

தமிழக போலீஸாருக்கு பாராட்டு

இதுகுறித்து நைஜீரியா வீரர் டோரிட் செமுவா ஒபோவினோ செய்தியாளர்களிடம் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்தேன். தமிழக போலீசார் மிகவும் சிறப்பாக பணியாற்றினர். உடல் நல குறைவினால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர்கள் நன்றாக கவனித்து கொண்டனர். தமிழகத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

English summary
Woman Police Sub Inspector Devika kisses Nigerian Chess player and send off in Chennai Airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X