மாமரத்தில் அலறிய ஸ்ரீஷா.. காசு வாங்கினால் இப்படியா? ஆந்திராவில் சந்திரபாபு நாயு கொந்தளிச்சாட்டாரு
சென்னை: வங்கியோ, தனிநபரோ, கடனை தந்துவிட்டு, அந்த கடனை வசூலிக்கும் முறையில் சிலசமயம் கண்டிப்பு காட்ட நேரிடுகிறது.. சிலசமயம், கடனை வசூலிப்பதில் கொடூரமான வழிமுறைகளையும் சிலர் கையாள்வது, கடன் வாங்கியவர்களை தற்கொலை வரை கொண்டுவந்து விட்டுவிடுகிறது.. ஆந்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்து கேள்விப்பட்டு, சந்திரபாபு நாயுடுவே கொந்தளித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாராயணபுரம் என்ற கிராமம் உள்ளது., இங்கு வசித்து வரும் தம்பதி திம்மராயப்பன் - ஸ்ரீஷா... இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.. அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்..

திம்மராயப்பன் அந்த பகுதியை சேர்ந்த முனிகண்ணப்பா என்பவரிடம் வட்டிக்கு ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கினாராம்.. ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது...
இதனால் கடன்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என்று பயந்துகொண்டு, திம்மராயப்பன் தன்னுடைய குடும்பத்துடன், தன்னுடைய கிராமத்துக்கு அருகிலுள்ள இடத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார்.
பள்ளிச்சான்றிதழ்
இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய தனது மகனின் பள்ளி சான்றிதழை வாங்குவதற்காக ஸ்ரீஷா இன்று நாராயணபுரம் கிராமத்திற்கு வந்திருக்கிறார்.. இந்த விஷயம் அதற்குள் முனிகண்ணப்பாவுக்கு சென்றது.. உடனே தன்னுடைய கூட்டாளிகளுடன் கிளம்பி வந்த முனிகண்ணப்பா, ஸ்ரீஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கணவன் வாங்கிய ரூ.80 ஆயிரம் பணத்தை உடனே வட்டியுடன் எடுத்து வைக்க வேண்டும் என்று கேட்டு மிரட்டியிருக்கிறார்.. அத்துடன் அங்கிருந்த மாமரத்திலும் ஸ்ரீஷாவை கட்டிவைத்து தாக்கியிருக்கிறார்..
நடவடிக்கை எடுத்த போலீஸ்
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த கிராமத்தினர், ஸ்ரீஷாவை விடுவிக்க முடியாமல் தவித்தனர். சிலர் தங்களது செல்போன்களில் இந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்தனர்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகிவிட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஸ்ரீஷாவை விரைந்து சென்று மீட்டனர். மேலும், முனிகண்ணப்பா மற்றும் கூட்டாளிகளை அதிரடியாக கைது செய்தனர்.. இந்த சம்பவம் ஆந்திராவிலும் பெரும் பரபரப்பை தந்துவருகிறது..
பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி தெரிவித்துள்ளார்.
பிணையமான பிரசாந்த் மனைவி
தமிழகத்தில்கூட இப்படியான கடன் மிரட்டல்கள் அதிகரித்துவிட்டன.. சில மாதத்துக்கு முன்பு, சேலம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் என்ற பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்ற கூலித்தொழிலாளிக்கும் இப்படியான நிலைமை ஏற்பட்டது. வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் 35 ஆயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கி, தவணை முறையில், மாத மாதம் 770 ரூபாய் கட்டி வருகிறார்.
ஒரே ஒரு மாதம், தன்னிடம் பணம் இல்லாததால், தவணை கட்ட முடியவில்லை.. உடனே வங்கியிலிருந்து பிரசாந்த் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், பிரசாந்தின் மனைவியை, பிணையாக அழைத்து சென்றனர்.. தவணை பணம் கட்டிவிட்டு, உன் கணவனை மீட்டு போக சொல் என்று கூறியிருக்கிறார். இதற்கு பிறகே பதறியடித்து ஓடிய பிரசாந்த், 770 ரூபாயை பேங்க்கில் கட்டிவிட்டு மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
இதுபோன்ற கொடுமைகளுக்குதான் தமிழக அரசு கடிவாளம் போட்டுள்ளது.. கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளை காட்டினால் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா சமீபத்தில் தமிழக பேரவையில் அமலாக்கப்பட்டது..
புதிய சட்டம் அமல்
கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால், குற்றமாக கருதப்படும்..பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 1 லட்சம் அபராதம் என்று சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது, அனைத்து விதமான சட்டவிரோத அழுத்தங்கள், மிரட்டல்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே நம்பப்படுகிறது. இதேபோன்ற சட்டம் ஆந்திராவிலும் கொண்டுவந்தால் நல்லா இருக்கும்..!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications