லாட்ஜூக்கு பெண்ணை வரசொல்லி.. ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் ஆட்டம் போட்ட நபர்.. அலேக்கா தூக்கிய போலீஸ்
சென்னை: திருவனந்தபுரம் அருகே, ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்து ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.. இந்த சம்பவத்தை விரிவாக இங்கே பார்ப்போம்..
வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே உள்ளது கட்டிப்பாறை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் அப்துல் ரகுமான்.. இவருக்கு 51 வயதாகிறது..

இவர் பல்வேறு நோய்களை ஆன்மீக முறையில் குணப்படுத்துவதாக கூறி, நீண்ட காலமாக அந்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது...
ஆன்மீக சிகிச்சை
இவரிடம் சிகிச்சை பெற தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வார்களாம். இதனால் அந்த பகுதியில் அப்துல் ரகுமான் மீது பலருக்கும் பெருத்த நம்பிக்கை இருந்துள்ளது..
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மேப்பாடி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒரு பெண், உடல்நலக் குறைவு காரணமாக அப்துல் ரகுமானிடம் ஆன்மீக சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது, தனியாக பேச வேண்டும் என்று சொல்லி, அருகிலுள்ள கோட்டப்படி பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதிக்கு வருமாறு அப்துல் ரகுமான் அந்த பெண்ணை அழைத்ததாக தெரிகிறது.
லாட்ஜூக்கு அழைத்த சாமியார்
உடனே அந்த பெண்ணும், அதை நம்பி லாட்ஜூக்கு சென்றுள்ளார். அங்கு, அப்துல் ரகுமான் அந்த பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்துவிட்டாராம்.. அதுமட்டுமல்ல, இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார்.. இதனால் பயந்து போன அந்த பெண், நீண்ட நாட்கள் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனிடையே, அப்துல் ரகுமான் தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, மீண்டும் மீண்டும் தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், வேறு வழியின்றி மேப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து, அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலும் அடைத்தனர். இதுதொடர்பான விசாரணையையும் போலீசார் மேறகொண்டு வருகிறார்கள்..
அப்துல் ரகுமானிடம் வேறு யாராவது இப்படி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான நபர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மூக்கில் நுகர செய்து - அரபி ஜோதிடம்
சமீபத்தில்கூட கேரளாவில் ஒரு போலி சாமியார் கைதாகி இருந்தார்.. பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த யூசப் அலி என்ற ஜோதிடர், அரபி ஜோதிடம் முறையில் தோஷங்கள் தீர்க்கப்படும் என்று விளம்பரப்படுத்தி உள்ளார்.. வந்தார். இதை நம்பிய ஒரு பெண், அவரை தொடர்பு கொண்டபோது, அந்த பெண்ணை நேரில் வரவழைத்து பாலியல் தொல்லை தந்துள்ளார்..
அதேபோல, குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் கூறி பெண்களை வரவழைத்து, அவர்களது கை, நெற்றியில் ஒரு திரவத்தை வைப்பாராம்.. உடனே அந்த திரவத்தை மூக்கால் நுகர செய்வாராம்.. உடனே அந்த பெண்கள் மயங்கி விழுந்ததுமே, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்..
தாழ்வு மனப்பான்மையை நீக்கி தருவதாக சொல்லி, ஒரு பெண்ணை நம்ப வைத்து அவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இந்த ஜோதிடர்.. பிறகு பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசுக்கு சென்றதையடுத்து, யூசப் அலி தற்போது ஜெயிலில் உள்ளார்.. அதற்குள் இன்னொரு ஜோதிடர் சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications