கவனிப்பே இல்லை.. பிழைப்பது சந்தேகம்.. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் வீடியோ
சென்னை: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிர் போகும் நிலையில் ஒரு பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் மாவட்ட அரசுத்துறை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிறைய நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீர் ஆக்சிஜன் தேவை
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவரும் ஒரு சிலர், திடீரென ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதால் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

நெஞ்சு வலிப்பதாக வீடியோ
அங்கு ஆக்சிஜன் இல்லை என்று ஊழியர்களால் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சையிலிருந்த ஒரு பெண் செல்போனில் வீடியோ பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார். அது வைரலாக பரவி வருகிறது.

ஊசி போடவில்லை
அங்கு, ஆக்சிஜன் இல்லை என்றும் தான் உயிருக்கு போராடி வரும் நிலையில், நெஞ்சு வலிப்பதாக கூறினாலும், இரண்டு நாட்களாக, ஒரு ஊசி போட கூட மருத்துவர்கள் முன்வரவில்லை என்றும், நான் இறந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது என்று கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பரபரப்பு
கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்கள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளிவந்து பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வரும் நிலையில், உயிருக்கு போராடும் ஒரு பெண்ணின் வீடியோவால் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.












Click it and Unblock the Notifications