வெயிட்டிங் ஓவர்.. உங்க அக்கவுண்டுக்கே வரப் போகுது ரூ.1000! ‘இந்த’ தேதியை மட்டும் மறக்காதீங்க மக்களே!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள மகளிர் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்காக அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
2021 தேர்தலை திமுக வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்று மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன போதும் நிதி நிலைமையை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாத நிலையில் 2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்பு அது தகுதியுள்ள மகளிருக்கு என மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பலர் விண்ணப்பித்தும் பயன்பெற முடியாமல் போனது. இதனால் மகளிரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

பிறகு பட்டியல் சரிபார்க்கப்பட்டு சிலர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 15ஆம் தேதி அவரவர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் நிலையில், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என தொடர்ந்து திமுகவினரிடம் குறை கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் ஜூன் மாதம் நான்காம் தேதி முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறி இருந்தது. ஆனால், அப்போது முதல் தற்போது வரை விண்ணப்பிக்க முடியவில்லை. இந்த நிலையில் பயனாளிகள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது.
மக்களுடன் முதல்வர் முகாம் ஏற்கனவே தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில், மகளிர் உரிமை தொகைக்கு என்றே இந்த முகாம் நடத்தப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள மகளிர் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்காக அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய கீதா ஜீவன்," கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பெண்கள் 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்காகவே 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றார். மேலும், தகுதியுள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் எனவும் ரேஷன் கடைகளில் கைரேகை வைக்க வேண்டும், கருவிழி பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்டவை மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்கும் நெருக்கடி எனவும், மத்திய அரசின் திட்ட மூலம் பணம் பெறும் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தான் அறிவுறுத்தியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications