Exclusive: மாசம் 1000 ரூபா மிச்சமாகுது.. இலவச பஸ் பயணத்தால் நெகிழும் பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தால் எங்களுக்கு மாசம் ரூ 1000 மிச்சமாகிறது. ஆனால் இலவச பயணம் மேற்கொள்ளும் பேருந்துக்காக காத்திருக்க நேரிடுகிறது என பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.

Recommended Video

    முதலாண்டு ஸ்டாலின் அரசின் முக்கிய சாதனை | One year of CM MK Stalin | Oneindia Tamil

    திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஒன் இந்தியா சார்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டிருந்தோம்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயணம், டாஸ்மாக் கடைகள் மூடுவது, நகைக் கடன் தள்ளுபடி, தாலிக்குத் தங்கம் திட்டம் ரத்து உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். அவற்றை பார்க்கலாம் வாருங்கள்.

    ரூ 1000 மிச்சம்

    ரூ 1000 மிச்சம்

    இதுகுறித்து மக்கள் கூறுகையில், பெண்களுக்கு இலவச பயணத்தால் எங்களுக்கு மாசம் ரூ 1000 மிச்சமாகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடினால் நல்லதுதான். இந்த டாஸ்மாக்கால் குடும்பம் கெட்டு போகிறது. இப்போது பெண்களே குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். போதையினால் பொதுமக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருது. போதை இல்லாத உலகமாக இருந்தால் நல்லதுதான்.

    விலைவாசி

    விலைவாசி

    விலைவாசி அதிகமாக இருக்கிறது. குடும்பம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளால்தானே அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இதை மூடிவிட்டால் என்ன செய்வது! பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பதால் அந்த குறிப்பிட்ட பேருந்தையே பெண்கள் நம்புகிறார்கள். ஆண்களும்தைானே ஓட்டு போட்டார்கள். எனவே ஆண்களுக்கும் பேருந்தில் இலவச என்ற திட்டத்தை கொண்டு வரலாம்.

    டாஸ்மாக்

    டாஸ்மாக்

    தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடினால் நல்லதுதான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பரவாயில்லை. விலைவாசியை பற்றி கேட்காதீங்கள், உடம்பு சரியில்லாமல் போய்விடும் போல!. பெட்ரோல் டீசல் விலையை பற்றி கேட்காதீங்க, ஆர்ட் அட்டாகே வரும். தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடினால் பாதி பிரச்சினை தீரும்.

     இலவச பஸ் பயணம்

    இலவச பஸ் பயணம்

    இலவச பஸ் பயணத்தால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் மிச்சமாகிறது. பாரிமுனை, மின்ட் பஸ் நிலையங்களில் சில நேரங்களில் கையை காட்டி நிறுத்தினாலும் ஏற்ற மாட்டேங்கிறார்கள். எங்கள் மேல் மோதுவது போலயே பேருந்துகள் வருகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடினால் நிறைய பேர் இறந்துவிடுவார்கள். பிளாக்கில் சரக்கு விற்பனை செய்வார்கள். அரசும் டாஸ்மாக்கை மூட மாட்டார்கள். விலைவாசி அதிகமாகவே இருக்கிறது. எண்ணெய், பருப்பு விலை உயர்வுதான்.

    டாஸ்மாக் கடைகள்

    டாஸ்மாக் கடைகள்

    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளச்சாராய கடைகளை ஒழிக்க வேண்டும். இந்த கேஸில் மாட்டினால் வெளியே வராத மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையை பார்த்து அடுத்தவர் பயப்படும் அளவுக்கு இருக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+