''நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்'' சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்... வரதட்சணை ஒழிப்பு நாடகம் அரங்கேற்றம்!
சென்னை: தேசிய பெண்கள் அமைப்பான ''நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்'' சார்பில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் வரதட்சணையை ஒழிக்கும் பொருட்டு வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
கல்வியில் சிறந்து விளங்க கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் சிறப்பான முறையில் களப்பணி ஆற்றிய நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் உறுப்பினர் ரிஹானாவிற்கு பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது

மகளிர் தினம் கொண்டாட்டாட்டம்
தேசிய பெண்கள் அமைப்பான ''நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்'' சார்பில் சென்னை திருவல்லிக்கேணி புதூர் முஸ்லிம் வெல்ஃபேர் சொசைட்டி மஹாலில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்சென்னை மாவட்ட தலைவி ராபியத்துல் பசரியா தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் டாக்டர் யாஸ்மின் வரவேற்றார்.

சிறப்புரையாற்றினார்கள்
மாவட்ட செயலாளர் சயீதா பீனா, கென்ரிச் சர்வதேச பள்ளி துணை முதல்வர் பாத்திமா கான், கேம்பஸ் ஃப்ரண்ட் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஜைனப் அல் ஹதீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூருல் ஹிக்மா பள்ளி முதல்வர் சுபைதா பீவி, பாப்புலர் ஃப்ரண்ட் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமிலா அஷ்ரஃப் ஆலிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்லூரி மாணவிக்கு உதவித்தொகை
இந்த நிகழ்ச்சியில் வரதட்சணையை ஒழிக்கும் பொருட்டு வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. மேலும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக பதிலளித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்க கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கொரோனாவில் களப்பணி ஆற்றியவருக்கு பரிசு
கொரோனா காலகட்டத்தில் சிறப்பான முறையில் களப்பணி ஆற்றிய நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் உறுப்பினர் ரிஹானாவிற்கு பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஹ்மத் மலிகா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications