கோயம்பேடு சந்தையில் இரவில் இப்படியுமா பெண்கள்.. வியாபாரிகளை விக்கித்து போக வைத்த சம்பவம்
சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய மொத்த காய்கறி விற்பனைச் சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு மார்க்கெட், எப்போதுமே பரபரப்பாக இயங்கும் இடமாக இருக்கும். இங்குதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் பழங்கள் குவித்து வைக்கப்பட்டு, அங்கிருந்து சென்னையின் சில்லறை வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டில் சில பெண்களின் செயலால் வியாபாரிகள் ஆடிப்போயிருக்கிறார்கள்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி சந்தை போலவே மிகப்பெரிய அளவில் பழக் கடைகள் ஏராளமாகச் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படும் பழங்களை, வியாபாரிகள் இரவு நேரத்திலும், அதிகாலை நேரத்திலும் கடைகளின் முன்பாக இறக்கி வைப்பார்கள். பின்னர் அவற்றை அடுக்கி வைப்பது வழக்கம் ஆகும். அப்படியான நேரங்களில் சிலர் பழங்களை திருடுகிறார்களாம்.

எப்படி என்றால், தற்காலிகமாகத் திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருக்கும் பழப்பெட்டிகளை டார்கெட் செய்து திருடுவதற்காகவே, அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குழுவாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் பெட்டிகளிலிருந்து தங்களுக்குத் தேவையான பழங்களை போட்டி போட்டுக்கொண்டு திருடிச் செல்லும் காட்சிகள் தற்போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் கடை உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் இருநாள் அல்லாமல், இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு தொடர் கதையாகவே மாறிவிட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கில் பழங்கள் திருடுபோவதால், எங்களது அன்றாட வியாபாரமும், லாபமும் பாதிக்கப்படுகிறது என்றும், இந்தத் திருடர்கள் யாரும் பசியில் திருடுபவர்கள் அல்ல என்றும். திட்டமிட்டு வந்து அதிக அளவில் பழங்களைத் திருடிச் செல்கிறார்கள் என்றும், ஒரு கடை உரிமையாளர் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், வியாபாரிகள் கண்காணிக்க முடியாமல் திரும்பும் நேரத்தில், திருடுவதில் சில பெண்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சிசிடிவி காட்சிகளை பார்த்த பின்னரே திருட்டு நடந்தது வியாபாரிகளுக்கு தெரிய வருகிறது.
எனவே, தாங்கள் படும் நஷ்டத்தைத் தடுக்கும் விதமாக, கோயம்பேடு போலீசார் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மார்க்கெட்டில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications