வெறும் 24 மணி நேரம்தான்.. மகளிர் உரிமை தொகை வாங்குபவர்களுக்கு வருது குட் நியூஸ்.. லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: மகளிர் உரிமை தொகை பணம் நாளை 1 நாள் முன்கூட்டியே வழங்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை நாள். அதன்பின் அடுத்த 2 நாட்களும் விடுமுறை நாட்கள். வங்கிகள் செயல்படாது. அதனால் நாளையே 1 நாள் முன்கூட்டியாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வெறும் ஐந்து ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்குப் பத்து நிமிடங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படுகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மகளிர் உரிமை தொகை
இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. வேறு எந்த கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. முதல்வர் ஸ்டாலின், தகுதியிருந்தும் உரிமைத் தொகை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இத்திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியை அளித்தார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் அக்டோபர் மாதம் வரை இரண்டு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை உங்களுடன் ஸ்டாலின்
முதற்கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 109 முகாம்கள் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. இம்முகாம்கள் மூலம் அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும், உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இம்முகாம்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
மகளிர் உரிமை தொகை ஆவணங்கள்
முகாமிற்கு வந்த சில பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். "நாங்கள் இங்கு வந்தவுடன், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை அவர்களே கொடுத்து, எங்களுக்காக அதை நிரப்புகிறார்கள். மேலும், எங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிப்பதால், வேலைகள் சுலபமாக முடிந்துவிடுகின்றன" என்று அவர்கள் கூறினர்.
அவர்கள் மேலும் கூறுகையில், "ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மட்டும் கொண்டு வந்தால் போதும். இந்த முகாமில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதுமட்டுமின்றி, உங்களிடம் வங்கி கணக்கு இல்லையென்றால், இங்கேயே வங்கி கணக்கு தொடங்கி, அடுத்த நிமிடமே மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்" என்றனர்.
மற்றொரு பெண் கூறுகையில், "எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. ஆனால், ரேஷன் கார்டில் பிரச்சினை இருந்தால், அதையும் இங்கேயே மாற்றி, அதன் பிறகு உடனடியாக அந்த ரேஷன் கார்டை வைத்து மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். எல்லாமே ஒரே இடத்தில் முடிக்கும் வகையில் தரமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications