Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Womens Day Wishes in Tamil 2026: உங்கள் வாழ்வின் தேவதைகளுக்கு அனுப்ப சிறந்த மகளிர் தின வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

Women's Day Wishes 2026 in Tamil (மகளிர் தின வாழ்த்துக்கள்): உலகெங்கும் மார்ச் 8-ம் தேதி பெண்மையின் ஆற்றலைக் கொண்டாடும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் கண்கள் எனப் போற்றப்படும் பெண்கள், இன்றைய நவீன வளர்ச்சியின் அச்சாணியாகத் திகழ்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும், ஆண்களின் வெற்றிக்கும் வித்தாக அமைவது பெண்ணின் தன்னலமற்ற தியாகமே. அடுக்களை முதல் விண்வெளி வரை சாதனை படைக்கும் பெண்களைக் கௌரவிக்கவே இந்தத் தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு மிக்க நாளில், உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய இதயப்பூர்வமான மகளிர் தின வாழ்த்துக்கள் மற்றும் பிரத்யேக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் இதோ உங்களுக்காக.

Womens Day Wishes

பெண்களின் துணிச்சலும்,
அன்பும், அர்ப்பணிப்பும்
உலகத்தை அழகாக மாற்றுகிறது.
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

Womens Day Wishes

ஒரு பெண் திமிராக இருப்பதற்கு
அவளின் ஒழுக்கமும் நேர்மையான
அன்பான குணமே காரணம்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Womens Day Wishes

சாதனைகளோடு சரித்திரம் படைக்க
கடவுளால் படைக்கப்பட்ட
கற்பவிருட்சம் தான் பெண்கள்
மகளிர் தின வாழ்த்துக்கள்

Womens Day Wishes

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Womens Day Wishes

கருதனில் மங்கையராய் பிறந்து
வயற்றில் குழந்தைகளை சுமந்து
மார்பில் கணவனை தாலாட்டி
முதுகில் குடும்ப சுமைகளைத்
தாங்கும் மங்கையருக்கு
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Womens Day Wishes

பெண்களில் இல்லாத உலகில்
அன்பு நிலைத்திருப்பதில்லை
அன்பு இல்லாத உலகில்
மனிதன் வாழ்ந்திருப்பதில்லை
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Happy International Women's Day 2026 Wishes Messages in Tamil:

1. வலிமையான, அழகான அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள் என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
2. பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருகவும் தெரியும், உருக்கவும் தெரியும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
3. பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள் உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள் நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள் உயிர் சுமந்தவள் தாயாகிறாள் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
4. தோள் கொடுக்கும் தோழியாய், வளம் சேர்க்கும் மனைவியாய், அறிவுரைக்கும் அன்னையாய், பரிந்துரைக்கும் மருமகளாய், குடும்பத் தலைவியாய்
பாசம் கொடுக்கும் சகோதரியாய், வலம் வரும் நீ வயது பல ஆனாலும், வலது கரமாய் திகழும் உன்னை, தினம் தினம் வாழ்த்த வேண்டுமே
5. வாழ்க்கை ஒரு வானவில், பெண்கள் அதன் நிறங்கள், எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிக்கும், அனைத்து பெண்களுக்கும், மகளிர் தின வாழ்த்துக்கள்
6. நான்கு வேதங்கள் சொல்லாத,அன்பின் பாதையும் பெண்ணே, உன் கருவறை கற்றுக் கொடுக்கிறது வாழ்க்கையில் மகளிர் தின வாழ்த்துக்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+