மகளிர் உரிமைத் துறையில் குட் நியூஸ்.. திருநெல்வேலி கலெக்டர் தந்த அறிவிப்பு.. ஜூன் 30 வரை தான் டைம்
சென்னை: வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. சுழற்சி முறையில் வழக்கு பணியாளர்-1 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர் ஆகிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் துறை
குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) இயங்கி வருகின்றது.
அதில் சுழற்சி முறையில் வழக்கு பணியாளர்-1 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் வழக்கு பணியாளர்-1 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர் ஆகிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விழிப்புணர்வுகள்
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவும், அவர்களின் பாதுகாப்பிற்கான உதவி எண்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு வழங்கிட செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தரவு நுழைவு பணியாளர் -1, (Data Entry Operator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் https://tirunelveli.nic.in/ என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு ஜுன் 30-ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications