அடிச்சுத் தூக்குது தமிழக அரசு.. உயரும் மகளிர் உரிமைத் தொகை! எவ்வளவு தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத் தொகை தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகையோடு ஆயிரம் ரூபாய் என்ற தொகை, 1500 ரூபாயாக வழங்கப்படலாம் எனவும் அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்கின்றனர். மேலும், சிலிண்டர் மானிய தொகை குறித்த அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர்.
திமுக ஆட்சி 2021ல் அமைய, மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரிய அளவில் கை கொடுத்தது. தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்தும், நிதிநிலை உள்ளிட்டவற்றால் உடனடியாக அந்த திட்டத்தை ஆரம்பிக்கவில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: பின்னர் தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது. அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
புதிதாக திருமணமானவர்கள், புதியதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மேல் முறையீடு செய்தவர்கள் என மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை விரைவில் புதுப்பிக்கப்பட இருக்கிறது. புதிய பயனர்கள் இணைப்பு தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது. வரும் ஜூன் மாதத்தில் புதிய பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கிறது எனவும் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் என்ற மகளிர் உரிமைத் தொகை 1500 ரூபாயாக உயர இருக்கிறது. தமிழ்நாட்டை மாதிரியாக கொண்டு புதுச்சேரி, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் 1500 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை கூட வழங்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய தமிழ்நாட்டில் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டாலும் இன்னும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த தொகை உயர்த்தி வழங்கப்படும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
தற்போது புதிய பட்டியல் வெளியானதும் 1500 ரூபாய் என்ற புதிய தொகை குறித்த தகவலும் வெளியாகும் என்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து பொங்கல் முதல் பயனாளிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் 1500 ரூபாயை வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மேலும் திமுக வாக்குறுதிகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் மானியம் குறித்த அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகளும் இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்றனர்.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications