சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தட்றோம்.. தூக்குறோம்.. ஆண்களை அசர வைத்த பெண்கள்.. இளவட்டக்கல் தூக்கி கலக்கல்!

By
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கள் விழாக்களில் ஆண்களைவிட சிறப்பாக பல பெண்கள் இளவட்டக்கல் மற்றும் உரலை தூக்கி சாதனை செய்திருக்கிறார்கள்.

Recommended Video

    தட்றோம்.. தூக்குறோம்.. ஆண்களை அசர வைத்த பெண்கள்.. இளவட்டக்கல் தூக்கி கலக்கல்!

    ஹிஜாப் அணிந்தால் அனுமதி இல்லை.. கர்நாடக கல்லூரியில் 3 வாரமாக தடுக்கப்படும் இஸ்லாமிய மாணவிகள்.. பரபர ஹிஜாப் அணிந்தால் அனுமதி இல்லை.. கர்நாடக கல்லூரியில் 3 வாரமாக தடுக்கப்படும் இஸ்லாமிய மாணவிகள்.. பரபர

    தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றது. காணும் பொங்கலான இன்று பல கிராமங்களில் காலை முதல் விளையாட்டுப்ப் போட்டிகள் நடந்துவருகின்றன. ஆண்களுக்கு வீரம் சொல்லும் விளையாட்டும், பெண்களுக்கு மியூசிக் சேர் போன்றவையே நடந்த்தப்பட்டு வந்தன.

    பொங்கல்

    பொங்கல்

    இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக இளவட்டக்கல் மற்றும் உரல் தூக்கும் நிகழ்ச்சியில் பெண்கள் கலந்துகொண்டிருக்கின்றனர், பல பெண்கள் ஆண்களை விடவும் சிறப்பாக இளவட்டக்கல் தூக்கி இருக்கிறார்கள்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது வடலிவிளை கிராமம். இங்கு இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

    இளவட்டக்கல்

    இளவட்டக்கல்

    இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் சுமார் 60, 80, 105, 129 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்களை தூக்க போட்டி நடந்தது. ஆண்கள் பெண்கள் என எல்லோரும் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை தூக்கி அசத்தினர். இளவட்டக்கல் போட்டி முடிந்ததும் உரல் தூக்கும் போட்டி நடந்தது.

    கடினம்

    கடினம்

    உரலை எடுத்து தூக்க வேண்டும், கீழே போட வேண்டும், பின் மீண்டும் தூக்கி கீழே போட வேண்டும். இப்படி அதிக நேரம் செய்பவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இது மிகவும் கடினமான போட்டியாகும். இதில் எடையை தூக்குவது மிகவும் கடினமாக இருக்கும்.

    பெண்கள் ஆர்வம்

    பெண்கள் ஆர்வம்

    இதிலும் பல பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். புடவை அணிந்திருந்தாலும், அதற்கு மேல் ஒரு சட்டையை போட்டுக்கொண்டு, உரலோ கல்லோ அதை தலைக்கு மேல் தூக்கி அசத்தியிருக்கிறார்கள் இந்தப்பெண்கள். சிறப்பாக கல்லைத் தூக்கி மாஸ் காட்டிய பெண்களுக்கு தனியாக பரிசுகளும் வழங்கப்பட்டது. பெண்கள் இளவட்டக்கல் மற்றும் உரல் தூக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Many women have done better than men in lifting big stone at Pongal festivals
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X