"எடப்பாடி பழனிசாமி பொய் சொன்னாரா? அருணா ஜெகதீசன் அறிக்கையை ஏற்கமாட்டோம்" அண்ணாமலை பரபர!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பொய் சொன்னார் என்று அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சில மாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2023ம் ஆண்டு முடியும் போது 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் வேலை கிடைத்திருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இதன் முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 75 இடங்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சென்னை மற்றும் கோவை ஆகிய இரு இடங்களில் நடக்கிறது. சென்னையில் 255 பேருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு
தொடர்ந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தி எதிர்ப்பு தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுக தமிழ் மொழிக்கு துரோகத்தை செய்து வருகிறது. இதுகுறித்து வரும் அக்.27ம் தேதி பாஜக சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பேசுவோம். கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் மட்டும் 52 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தமிழ் வழியில் நடத்தப்படும் பள்ளிகள் ஆங்காங்கே மூடப்பட்டு வருகிறது.

அண்ணாமலை கேள்வி
தமிழை வளர்க்க இதுவரை திமுக என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் இந்தி மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்வி இந்தியில் கற்பிக்கப்படுகிறது. இதுபோல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிக்க திமுக நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

புதிய கல்விக் கொள்கை
தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கையில் 6ம் வகுப்பு வரை தமிழ் மொழி தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். அதனை தமிழக அரசு இதுவரை ஏற்கவில்லை. அனைத்தையும் எதிர்க்கும் திமுக அரசு, தமிழுக்கு என்ன செய்துள்ளது. திமுக சார்பாக கொண்டு வந்துள்ள மேயர்கள் பேசும் தமிழின் தரமில்லாமல் இருக்கிறது.

பாஜக ஆர்ப்பாட்டம்
வரும் அக்.27ம் தேதி திமுகவினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் இந்தி எங்கு எல்லாம் கற்பிக்கப்படுகிறது என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவோம். இந்தி திணிப்பு என்பது எங்கேயும் நடக்கவில்லை. மத்திய அரசின் நோக்கம் என்பது மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவது மொழியாக பிடித்த மொழியை கற்கலாம் என்பதுதான். தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி திணிப்பு நடக்கவில்லை என்பது நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.

அருணா ஜெகதீசன் அறிக்கை
தொடர்ந்து அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை பற்றிய கேள்விக்கு, அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு காரணம் யார் என்பது தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறை, அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடைநிலையில் உள்ள போலீஸ் துப்பாக்கியால் சுட்டதற்காக உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியில்லை. தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ரஜினி கருத்து பற்றி அண்ணாமலை
தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரஜினி கருத்து பற்றி விசாரணை அறிக்கையின் கருத்து பற்றிய கேள்விக்கு, தூத்துக்குடி வன்முறை விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. ரஜினிகாந்த் பற்றி ஆணையம் கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ரஜினிகாந்த் பற்றி ஆணையம் கூறிய கருத்து என்பது தவறான முன்னுதாரணம்.

இபிஎஸ் பற்றி கருத்து
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது சரியா என்றால் தெரியாது. ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய விதம் தவறு. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பொய் சொன்னார் என்று அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் . துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதிலும் தவறு இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
ரஜினி பற்றி ஆதவ் சொன்ன கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த தக் லைஃப் பதில்.. குவியும் கமெண்ட்ஸ் -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications