1.. 2.. 3.. ஸ்டார்ட் ஆயிடுச்சே.. "பாஜக சொன்னால் கேட்க மாட்டோம்".. டெல்லிக்கு எடப்பாடி டீம் மெசேஜ் ?
ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ள பாஜக தங்களை நிர்ப்பந்திக்க முடியாது என்கிறது எடப்பாடி டீம்
சென்னை பாஜக தங்களை நிர்ப்பந்திக்க முடியாது, பாஜக சொன்னால் நாங்கள் கேட்கவும் மாட்டோம் என்று எடப்பாடி டீம் கெத்தாக சொல்கிறது.. என்ன காரணம்?
தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக இருப்பவர் ஆதிராஜாராம்.. கட்சியில் சீனியரும்கூட.. இவர் தீவிரமான எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியும்.. இவர் "ஒன் இந்தியா" தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
அந்த பேட்டியின்போது, விஜயபாஸ்கர், வேலுமணியிடம் நேற்றைய தினம் நடந்த ரெய்டுகள், ஓபிஎஸ் அரசியல், ஒற்றை தலைமை விவகாரம், பாஜகவின் தலையீடு உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு ராஜாராம் விலாவரியான பதில்களை தந்துள்ளார்.. குறிப்பாக, ஓபிஎஸ்ஸை எடப்பாடி டீம் ஏன் வெறுக்கிறது என்பது குறித்தும் ராஜாராம் தெளிவுபடுத்தி உள்ளார்.

3 புள்ளி
"ஓபிஎஸ் மறுபடியும் வந்தால் நாங்கள் அவரை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம்.. சசிகலா தினகரனையும் சேர்த்து கொள்ள மாட்டோம்.. ஒருவேளை, ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் 3 பேரும் ஒரு அணியாக செயல்பட்டாலும், அதனால் அதிமுகவுக்கு எந்தவிதமான சிக்கலும் கிடையாது.. இதன்காரணமாக அதிமுக பலவீனமும் ஆகாது.. இவங்க 3 பேரும் சொல்லிதான் முக்குலத்தோர்கள் ஓட்டுப்போடப் போறாங்களா? அவரவர், அவரவருக்கு பிடித்தமான கட்சிக்குதான் ஓட்டு போடுவார்கள்..

முதல் மரியாதை
எல்லா இனத்தை சேர்ந்தவர்களும், அவரவர் கட்சிக்குதான் ஓட்டு போடுவார்கள்.. ஓபிஎஸ் இல்லாமல் இருப்பது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தையே தரும்.. காரணம், இவர்களிடம் அதிகாரம் இருந்தபோது, உழைத்தவர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.. இவர்களுக்கு கப்பம் கட்டியவர்கள்தான் அன்று மேலே வந்தார்கள்.. இப்போதான் கட்சி நல்லா இருக்கு.. அனைவருக்கும் உரிய மரியாதை கிடைக்கும் என்று இப்போதுதான் நிர்வாகிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இலையோ.. தலையோ
ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக எங்களுக்கு அழுத்தம் தர முடியாது.. வேண்டுமானால் பாஜக அவர்களை சேர்த்து கொள்ளட்டும்.. ஆனால், எங்கள் தொண்டர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. அவர்களை சேர்த்து கொள்ளுங்கள் என்று எப்படி எங்களை பாஜக நிர்ப்பந்தப்படுத்த முடியும்? யாருடன் கூட்டணி என்பது பற்றியெல்லாம் தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள்.. ஆனால், எங்களை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.. சட்டசபை தேர்தலிலேயே எங்களை நிர்பந்தப்படுத்தினார்களே, என்னாச்சு? ஒதுக்கிட்டோமே...

லீலாபேலஸ்
லீலா பேலஸில் அன்னைக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா.. பாஜகவுடன் இணக்கமான போக்கு வைத்துள்ளோம் என்பதற்காக, எங்கள் ஆதரவாளர்களிடம் ரெய்டு செய்யாமல் விட்டுவிட்டார்களா என்ன? இனிமேலும் ரெய்டு செய்யட்டும்.. எங்கள் கைகளில் எதுவும் இல்லை.. எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.. அதிமுக கட்சி, சின்னம் முடக்கப்பட்டுவிடும் என்று திமுக கனவு காண்கிறது.. சசிகலா, தினகரன் கனவு காண்கிறார்கள்..

வாஷ் அவுட்
ஆனால், சின்னத்தை பார்த்துதான் ஓட்டுப்போட வேண்டிய நிலைமையில் இன்று மக்களின் கல்வி அறிவு இல்லை.. அப்படின்னா, 1996-ல் அம்மா இருக்கும்போது கட்சி வாஷ்அவுட் ஆகிவிட்டதே.. தலைவர் இருக்கும்போதே 2 எம்பிதானே வெற்றி பெற்றோம்.. எனவே, தலைமையை பார்த்தும், தலைமையின் செயல்பாடுகளையும் வைத்துதான், மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்றார்... ஏற்கனவே பாஜகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்ற செய்திகள் கசிந்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர் தரப்பிலேயே இப்படி ஒரு கருத்து கூறியிருப்பது, விவாதத்தை கிளப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications