சென்னை மக்கள் இனி ஜாலி பண்ணலாம்.. Wonderla திறப்புக்கு வெளியான தேதி.. என்னென்ன கேம்கள் இருக்கு?
சென்னை: சென்னை அருகே 65 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.600 கோடி செலவில் பிரமாண்டமாக ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ‛வொண்டர்லா' மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவது எப்போது? அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது? என்பது பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
‛வொண்டர்லா'.. நம் நாட்டில் பிரலமான பொழுதுபோக்கு பூங்காவாக உள்ளது. சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வகையில் நீர் விளையாட்டுகள், அட்வென்சர்ஸ் கேம்கள் உள்ளன. இதனால் பலருக்கும் ‛வொண்டர்லா' ‛பேவரைட் பிளேஸ்' ஆக இருக்கிறது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க கடந்த 2023ம் ஆண்டில் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா இள்ளளூர் கிராமத்தில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.
‛வொண்டர்லா’ பணி நிறைவு
மொத்தம் 65 ஏக்கரில் ரூ.600 கோடி செலவில் ‛வொண்டர்லா' அமைக்கப்பட்டு வந்தது. தற்போது பணிகள் நிறைவடைகிறது. இதுபற்றி ‛வொண்டர்லா'வின் செயல் தலைவருமான, நிர்வாக இயக்குநருமான அருண் சிட்டிலபில்லி, ‛‛எங்களின் சென்னை திட்டம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. 600 கோடி மதிப்பீட்டில் கட ஹை டெக் பார்க்கை 24 மாதங்களில் முடித்த எனது மொத்த குழுவினருக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
திறப்பு விழா எப்போது?
இந்த பதிவில் அவர் திறப்பு விழா பற்றி தெரிவிக்கவில்லை. இருப்பினும் இதற்கு முன்பு அவர் டிசம்பர் 15ம் தேதி ‛வொண்டர்லா' திறப்பு விழா காண உள்ளதாக தெரிவித்தார். மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை அந்த சமயத்தில் தான் வரும். அதனை மனதில் வைத்து அவர் தெரிவித்து இருந்தார்.
சென்னை மக்கள் ஜாலி பண்ணலாம்
இதனால் அடுத்த மாதம் முதல் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றிய மக்கள் இனி ‛வொண்டர்லா'வில் ஜாலி பண்ணலாம். இந்த இள்ளளூர் கிராமம் சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. அதோடு ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன ஸ்பெஷல்
இங்கு இந்தியாவின் உயரமான ‛ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இது ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை Swiss ride Manufacutrer Bollliger & Mabillard நிறுவனம் அமைத்துள்ளது. பிரிட்டனின் லண்டன் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் ரோலர் கோஸ்டருக்கு நிகராக இது அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் பொதுமக்களுக்கு ‛த்ரில்' அனுபவத்தை தரும்.
அதேபோல் மோனோ ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் பல பொழுது போக்கு பூங்காக்களில் இல்லை. இதன்மூலம் பொதுமக்கள் ‛வொண்டர்லா' முழுவதையும் சுற்றி பார்க்கலாம். இது மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் 35 மீட்ர் உயர Ferris Wheel உள்ளது. இதன்மூலம் வொண்டர்லாவில் இருந்து கொண்டே ஓஎம்ஆர் காரிடார், கடற்கரை பகுதிகளை பொதுமக்கள் ரசிக்கலாம்.
நீர் விளையாட்டுகள்
இதுதவிர வழக்கமான பிற வொண்டர்லா பூங்காக்களில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள், நீர் விளையாட்டுகள் உள்பட பல வசதிகள் உள்ளன. தற்போது ‛வொண்டர்லா' கர்நாடகா தலைநகர் பெங்களூர், கேரளா மாநிலம் கொச்சி மற்றும் ஆந்திர தலைநகர் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளது. ஒடிசாவிலும், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. ஒடிசாவின் புவனேஸ்வரை தொடர்ந்து தமிழகத்தில் திறப்பு விழா காண்கிறது. மேலும் அதன்படி மத்திய பிரதேசம், பஞ்சாப், கோவாவில் வொண்டர்லா அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications