சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொழிலாளி பலி.. நாளை உலக கோப்பை போட்டி நடக்கும் நிலையில் சோகம்!
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி முருகன் ( வயது 52) என்பவர் 14 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தவறி விழுந்து சுயநினைவின்றிக் கிடந்த முருகன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபுவை கைது செய்து போலீசார் விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 14 அடி உயரத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடும் இன்றி பணி செய்ய வைக்கப்பட்டாரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தியா - ஆஸி. இடையேயான ஆட்டம் நடைபெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை எனக் கூறப்படுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications