சென்னையின் ஒவ்வொரு ஏரியாவும்.. அப்படியே மாறுது பாருங்க.. மாதவரத்திற்கு வரும் பிரம்மாண்ட மால்
சென்னை: சென்னையின் மாதவரம் பகுதியில் மிக பிரம்மாண்டமான மால் ஒன்று அமைக்கப்பட உள்ளது. மாதவரத்தில் வரும் என்டிஆர் ஐகானிக் மாலின் ரெண்டர்கள் நேற்று வெளியாகின. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
490,000 சதுர பரப்பிற்கு இந்த மால் அமைக்கப்பட உள்ளது. ஷாப்பிங் மால், ஹைப்பர் மார்க்கெட் & மல்டிபிளக்ஸ், ஃபுட் கோர்ட் ஆகியவை இங்கே அமைக்கப்பட உள்ளது. 1,702 இருக்கைகள் கொண்ட சினிப்ளெக்ஸ் அமைக்கப்பட உள்ளது.

அதேபோல் இன்னொரு பக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே மிகப்பெரிய பிரம்மாண்ட மால் கட்டப்பட்டு வருகிறது. அலுவலகம் + மால் என்ற வகையில் இந்த மால் காட்டப்படுகிறது.
6 மாடிகள் கொண்ட மால் கட்டப்படும். இது சிட்டி மால் என்று அழைக்கப்படுகிறது. அது போக 11 மாடிக்கு அலுவலக கட்டிடம் வர உள்ளது. இது போக பார்க்கிங் செய்ய 3 அண்டர் கிரவுண்ட் வர உள்ளது. இதற்கான கட்டுமானம் நடந்து வருகிறது. தற்போதைக்கு மாலின் அடிப்படை கட்டுமானம் மட்டும் முடிந்துள்ளது.
சென்னைக்கு வரும் மால்: ஏற்கனவே சென்னையில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான மால்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு முக்கிய மால் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டியில் உள்ள மால் ஆஃப் மெட்ராஸ் அமைக்கப்பட உள்ளது. 1.2 மில்லியன் சதுர அடியில் இந்த மால் அமைக்கப்பட உள்ளது. 5 மாடிகள் கொண்ட இந்த மாலில் 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன.
12 ஆங்கர் கடைகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் மொத்தமாக 9 திரை கொண்ட PVR மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட உள்ளன. 2 ஏக்கர் சென்ட்ரல் பிளாசா மார்க்கெட்டிங் & விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல் 3 நிலைகள் கொண்ட 1500 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக கட்டுமானம் தற்போது தொடங்கி உள்ளது. ஏற்கனவே சென்னை அசோக் நகரில் பெரிய மால் வர உள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் மிகப்பெரிய 22 அடுக்கு மாடி கட்டப்பட்டு வருகிறது . இடையில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமானம் மீண்டும் தொடங்கி உள்ளது. வேகமாக சென்று வரும் கட்டுமானம் தற்போது 17 மாடிகளை கடந்து கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னையின் இந்த பகுதியில் பிரம்மாண்ட மால் வர உள்ளது. இதை யார் காட்டுகிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகிடுவீர்கள். தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தில் தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. ட்வின் டவர் என்பதால் இன்னொரு டவரும் உடன் கட்டப்பட உள்ளது. மீதம் உள்ள மாடிகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது. இந்த நிலையில்தான் சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கு அருகிலேயேதான் ஹவுசிங் போர்ட் கட்டும் மால் வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications